நாளை துணை ஜனாதிபதி தேர்தல்
டெல்லி:
துணை ஜனாதிபதி பதவிக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும்சேர்ந்த சுமார் 790 எம்.பிக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
கடந்த ஜூலை 15ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட அணுவிஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் அப்துல் கலாமுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆதரவளித்ததைத்தொடர்ந்து அவரே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் நாளை (திங்கள்கிழமை) துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் மூத்த பா.ஜ.க. தலைவர்களில்ஒருவருமான பைரோன் சிங் ஷெகாவத் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்த காங்கிரஸ் கட்சி துணைஜனாதிபதி தேர்தலில் தங்கள் கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தது.
அதன்படி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான சுசில் குமார் ஷிண்டே துணை ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடுகிறார்.
ஷெகாவத் மற்றும் ஷிண்டேயைத் தவிர இந்தத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த அனைவருடையமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே நேரடிப் போட்டிநிலவுகிறது.
ஷெகாவத்துக்கு அதிமுக உள்ளிட்ட பல எதிர்க் கட்சிகள் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளன. இதற்கிடையேசமீபத்தில் சென்னை சென்ற ஷிண்டே தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவைச்சந்தித்து தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் ஷெகாவத்துக்கே அதிமுக எம்.பிக்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது. சுமார் 455 எம்.பிக்கள்ஷெகாவத்துக்கு வாக்களிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே துணை ஜனாதிபதி தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும்ஷெகாவத்தை ஆதரிப்பதாகக் கூறியுள்ள கட்சிகளுக்கும் இன்று இரவு பிரதமர் வாஜ்பாய் விருந்தளிக்கிறார்.
ஆனால் கிழக்கு ரயில்வேயைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கூட்டணியில் உள்ள திரிணாமூல்காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி இந்த விருந்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றுதெரிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications