தடையை எதிர்த்து வழக்கு: நெடுமாறன் கட்சி முடிவு
சென்னை:
தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின்பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கூறினார்.
ஹைதராபாத்திலிருந்து நேற்று மாலை சென்னை திரும்பிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழர் தேசிய இயக்கம்தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனும் அதன் உறுப்பினர்களும் 1908ம் ஆண்டு குற்றவியல்சட்டத் திருத்தச் சட்டத்தின் கீழ் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதால்அவ்வியக்கத்தைத் தடை செய்துள்ளதாகவும் ஜெயலலிதா கூறினார்.
கடந்த 8ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டு, மேலேகூறப்பட்ட சட்டத்தின் கீழ் தமிழர் தேசிய இயக்கத்தைத் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும் ஜெயலலிதாதெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் இந்தத் தடை நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக வீரபாண்டியன்நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில்,
தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டது தொடர்பாக எங்களுக்கு இன்னும் என்தத் தகவலும் வரவில்லை.அந்த விவரங்கள் வந்ததும் சட்டப்பூர்வமாக இந்தப் பிரச்சனையை எதிர் கொள்வோம்.
தமிழர்களின் உரிமையைப் பறிக்கும், கருத்துரிமையை பறிக்கும் செயல் இது. தமிழக அரசின் இந்தநெருக்குதல்களுக்கு பணிந்துவிட மாட்டோம் என்றார் வீரபாண்டியன்.
கடந்த 1979ம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகிய நெடுமாறன் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் என்ற அமைப்பைத்தொடங்கினார். இந்த அமைப்பு தான் பின்னர் 1988ம் ஆண்டு தமிழர் தேசிய இயக்கம் என்று பெயர் மாற்றம்செய்யப்பட்டது.
வீரபாண்டியன் தவிர, கே. சவுந்திரராஜன் மற்றும் கே. பரந்தாமன் ஆகியோரும் தமிழர் தேசிய இயக்கத்தின்பொதுச் செயலாளர்களாக உள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications