தமிழகம் விரைவில் சுடுகாடாக மாறும்: கருணாநிதி எச்சரிக்கை
சென்னை:
போலீசாரும் ரவுடிகளும் சேர்ந்து பேயாட்டம் போடுவதை நிறுத்தாவிட்டால் தமிழகம் விரைவில் சுடுகாடாக மாறுவதைத் தடுக்கமுடியாமல் போய்விடும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மதுரையில் திமுகவினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதி கலாம் தலையிட வேண்டும்எனவும் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக திமுக எம்.பிக்கள் 15 பேரும் கலாமிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
முன்னதாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், பசி, பட்டினியால் வாடும் நெசவாளர்களுக்கு கஞ்சி ஊற்றும் திமுகவினதிட்டத்தை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ளாமல் அதையும் அரசியல் ஆக்கி அட்டூழியம் செய்து வருகிறது அதிமுக.
அம்மையார் குப்பத்தில் கஞ்சி ஊற்ற நான் செல்ல இருந்தபோது போர்க் களம் அமைக்க அதிமுகவினர் திட்டமிட்டனர்.மதுரையில் போர்க் களத்தையே அமைத்துவிட்டனர். திமுகவினரை தாக்கியதோடு மட்டுமல்லாமல், தாக்கப்பட்டவர்களையேகைதும் செய்து சிறையில் அடைத்து வெறித்தனம் செய்து வருகிறது இந்த அடாவடி அரசு.
திமுகவினரை வழக்குத் தொடர்ந்து மிரட்டி வரும் ஆளும் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டியது நமது கடமை. வரும் 19ம் தேதிமாவட்டத் தலைநகரங்களில் நடக்கும் கண்டனப் பேரணிகளில் திமுகவினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
எம்.பிக்கள் கடிதம்:
இந் நிலையில் தமிழகத்தில் திமுகவினர் மீது நடந்து வரும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி அப்துல்கலாமிடம் திமுக எம்.பிக்கள் கடிதம் தந்துள்ளனர். மேலும் அன்பழகன் எழுதிய கடிதத்தையும் அவர்கள் ஜனாதிபதி மாளிகையில்ஒப்படைத்தனர்.
எம்.பிக்கள் எழுதியுள்ள கடிதத்தில், எங்கள் கட்சியினரையே அடித்துப் போட்டுவிட்டு அவர்களையே போலீசார் கைதும்செய்துள்ளனர். தமிழகத்தில் போலீசார் மிகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதை நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications