ரணிலுக்கு சந்திரிகா புதிய முட்டுக்கட்டை
கொழும்பு:
நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா புதியபிரச்சனையை உருவாக்கியுள்ளார்.
தனது திட்டங்களுக்கு சந்திரிகா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவரது அதிகாரத்தைக் குறைக்க ரணில் முடிவு செய்துள்ளார்.இதை சந்திரிகா ஏற்காவிட்டால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைத் தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், நாடாளுமன்றத்கைக் கலைக்க அரசு பரிந்துரைத்தாலும் கூட அதை ஏற்க மாட்டேன் என சந்திரிகா இப்போது புதிய மிரட்டல்விடுத்துள்ளார்.
இது குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஹரிம் பெரிஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
நாடாளுமன்றத்தைக் கலைக்கச் சொல்லி பிரதமரும் அரசும் பரிந்துரை தான் செய்யலாம். அதை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம்அதிபருக்கு இல்லை என்றார்.
இதன்மூலம் இடைத் தேர்தலைச் சந்திக்கவும் ரணிலுக்கு சந்திரிகா முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
பெரிஸ் மேலும் கூறுகையில், அதிகாரக் குறைப்பை அதிபர் ஏற்கத் தயாராக இல்லை. அதே நேரத்தில் புலிகளுடன் பேச்சு நடத்தவோ,அமைதி முயற்சிகளுக்கோ அதிபர் இடைஞ்சலாக இருக்க மாட்டார்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவின் புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்துடன் அமைச்சர் மிலிந்த மொரகொடா பேச்சு நடத்துவதைஅதிபர் வரவேற்கிறார். முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளையும் சந்திரிகா ஆதரித்தார். அதைப் போலவே இதையும் ஆதரிக்கிறார்.
ஆனால், பேச்சுவார்த்தைகளில் எல்லா விஷயமும் பேசப்பட வேண்டும். மனித உரிமைகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.இடைக்கால நிர்வாகம், புலிகளுக்கு அதிகாரம் குறித்து மட்டும் பேசாமல் மற்ற விவகாரங்களையும் பேச வேண்டும். புலிகளின்தலைமையில் அமையும் அரசில் ஜனநாயக உரிமைகள் இருக்க வேண்டும் என்று அதிபர் விரும்புகிறார்.
அதிபருக்கும் பிரதமருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைய லட்சுமண் கதிர்காமர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.அதே நேரம் பிரதமரை நேரில் சந்திக்கும் திட்டம் ஏதும் அதிபர் சந்திரிகாவுக்கு இல்லை என்றார் பெரிஸ்.
நார்வே சென்றார் மொரகொடா:
இந் நிலையில் ஆண்டன் பாலசிங்கத்தை நேரில் சந்தித்துப் பேச நார்வே தலைநகர் ஓஸ்லோவுக்கு அமைச்ச் மொரகொடா புறப்பட்டுச்சென்றார். தாய்லாந்து பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து இருவரும் பேசவுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications