முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை ஏன்?: "போயஸ் தோட்டத்தை கேளுங்கள்"- கருணாநிதி
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது ஏன் என்ற நிருபர்களின் கேள்விக்கு போயஸ்தோட்டத்தில் போய்க் கேளுங்கள் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி பதிலளித்தார்.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், ஜெனிபர் சந்திரன், திமுகவுக்குத் தாவியமுன்னாள் அதிமுக அமைச்சர் ரகுபதி மற்றும் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை எம்.எல்.ஏ. ரெங்கநாதன் ஆகியோர்வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக இன்று நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
ஆனால் அரசியல் பழி வாங்கும் நோக்கில் தான் இந்தச் சோதனைகள் நடைபெற்றுள்ளன என்றார் கருணாநிதி.
முன்னதாக நேற்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அதிமுக அரசின் இந்தத் திடீர் சோதனைகள் மூலம் தான் திமுக இன்னும் அதிகமான விறுவிறுப்புடன் செயல்படும்.
இதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என்றார் கருணாநிதி.
அப்போது இந்தச் சோதனைக்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் போயஸ்தோட்டத்திற்குச் சென்று கேட்டுக் கொள்ளுங்கள் என்று கருணாநிதி பதில் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications