ஆர்ப்பாட்டம் வேண்டாம்: ராமதாஸ் வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

"பாபா" படப் பிரச்சனைக்கு நேற்றே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவும் இனி யாரும் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட வேண்டாம் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பாக இன்று கடலூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடிக்கும் காட்சிகளைப் பார்த்து சிறுவர்கள் மிகவும் கெட்டுப் போய்விட்டனர்.

சமீப காலத்தில் பெரும்பாலும் அனைத்துப் படங்களிலுமே கதாநாயகர்கள் சிகரெட்டை ஸ்டைலாகப் பிடிக்கும்காட்சிகள் அதிகரித்துள்ளது.

திரைப்படங்களைப் பார்த்துப் பார்த்து தான் ஏராளமான சிறுவர்கள் சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.சிகரெட் பிடிக்கும் சிறுவர்கள் குறித்த கணக்கெடுப்பில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தைவகிக்கிறது.

எனவே சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுக்கு சென்சார் போர்டு தடைவிதிக்க வேண்டும்.

"பாபா" படப் பிரச்சனைக்கு நேற்றே முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இனிமேல் இது குறித்து யாரும்ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்றார் ராமதாஸ்.

நடந்ததை மறப்போம் - திருநாவுக்கரசர்:

இதற்கிடையே "பாபா"-பாமக விவகாரம் தொடர்பாக இதுவரை நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். இனிநல்லவற்றையே நினைப்போம் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திருநாவுக்கரசர்கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"பாபா" படம் குறித்து ராமதாஸ் கூறிய கருத்துக்கள், பாமகவினர் வெளியிட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் ஆகியவை ஏற்கத் தக்கவை அல்ல.

அதே போல் அதற்கு எதிராக ரஜினி ரசிகர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்க முடியாது.

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அவற்றை மறந்து விட்டு இனி நல்லவற்றையே நினைப்போம். இருதரப்பினரும் சமாதானமாகப் போவதையே நான் விரும்புகிறேன். மக்களும் அதைத் தான் விரும்புகின்றனர் என்றுஅவ்வறிக்கையில் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

"பாபா" போஸ்டரை கிழிக்க முயன்ற பாமக எம்.எல்.ஏ.:

இதற்கிடையே சேலத்தில் உள்ள ஒரு தியேட்டரில் "பாபா" பட போஸ்டரைக் கிழிக்க முயன்ற ஒரு பாமக எம்.எல்.ஏ.கைது செய்யப்பட்டார்.

சேலம்-1 சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏவான கார்த்திக் 100 ஆதரவாளர்களுடன் அந்தத் தியேட்டருக்குச் சென்று"பாபா" படத்தைத் திரையிடக் கூடாது என்று தடுத்தனர். மேலும் அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும்கிழிக்க முயன்றனர்.

இதையடுத்து கார்த்திக் உள்பட அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் "ராமதாஸ் கொடும்பாவி" எரிப்பு:

இதற்கிடையே மதுரையில் ராமதாசின் உருவபொம்மையை எரித்த 30 ரஜினி ரசிகர்களை போலீசார் கைதுசெய்தனர்.

கீழவாசல், கட்டபொம்மன் சிலை உள்ளிட்ட நான்கு இடங்களில் ராமதாஸ் உருவபொம்மை எரிக்கப்பட்டதாகக்கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+