திமுக தலைவர் பதவியிலிருந்து விலக கருணாநிதி விருப்பம்
சென்னை:
கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விரைவில் விலகப் போவதாகவும், கட்சியை இளைஞர்களின் கையில்ஒப்படைக்கப் போவதாகவும் திமுக தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளார்.
மதுரைக் கஞ்சித் தொட்டித் திறப்பின் போது ஏற்பட்ட மோதலைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் (மதுரைநீங்கலாக) திமுகவினர் நேற்று (திங்கள்கிழமை) கண்டனப் பேரணியை நடத்தினர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த பேரணியை கருணாநிதி பார்வையிட்டார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
இளைஞர்களுக்கு கட்சியில் பொறுப்புகளை வழங்க நானும், மூத்த தலைவர்களும் முடிவு செய்துள்ளோம்.
நானும், அன்பழகனும், ஆற்காடு வீராசாமியும் கட்சிக்குப் புது ரத்தம் கொடுக்கும் பொறுப்பில் இருக்கிறோம்.அந்தக் கடமையை நாங்கள் தட்டிக் கழித்து விட முடியாது. விரைவில் அந்தக் கடமையை நாங்கள்நிறைவேற்றுவோம்.
என்னை நிரந்தரத் தலைவர் என்று வாழ்த்தி தொண்டர்கள் கோஷமிடுகிறார்கள். யாருமே எப்போதுமே நிரந்தரமாகஇருப்பதில்லை. நானும் கூட அதற்கு உட்பட்டவன் தான். இயற்கை அதை அனுமதிக்காது. எல்லாவற்றிற்கும் ஒருமாற்று ஏற்பாடு இருக்கும்.
கட்சியின் ஆலோசகராக தொடர நான் விரும்புகிறேன். சர்வாதிகாரப் போக்கில் கட்சியின் தலைமைப் பொறுப்பில்நானே தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை.
அதிக அரசின் கையில் சிக்கி சட்டம், ஒழுங்கும் படாத பாடு படுகின்றன. தவறுகளை இந்த அரசுத் திருத்திக்கொள்ளாத பட்சத்தில் நேருக்கு நேர் மோதவும் திமுக தயாராக உள்ளது என்றார் கருணாநிதி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications