தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட சங்கருக்கு மிக முக்கிய பதவி: மத்திய அரசு அதிரடி
டெல்லி:
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் தற்போதைய மத்திய திட்டக்குழுவின் செயலாளருமான பி.சங்கர் மத்திய கண்காணிப்புத்துறை (விஜிலென்ஸ்) கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லஞ்சம், ஊழல்களைத் தடுக்க உருவாக்கப்பட்டது இந்த விஜிலென்ஸ் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது. இதன்முதன் தலைவராக இருந்த விட்டல் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து நாடு முழுவதும் பரபரப்பைஏற்படுத்தினார்.
அவர் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து சங்கர் அந்த முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர்கலந்து ஆலோசித்து இந்தப் பதவிக்கு சங்கரை நியமித்தனர்.
தற்போதைய விஜிலென்ஸ் கமிஷனராக உள்ள என். விட்டலின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது.
1966ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்த சங்கர், திருப்பத்தூரில் சப்-கலெக்டராகத் தன் பணியைத் துவக்கினார்.பின்னர் மத்திய அரசில் பல்வேறு முக்கியப் பணிகள் வகித்தார்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த போது, முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் மற்றும் காஞ்சிமடத்தின் பரிந்துரையின்பேரில் இவரை தலைமைச் செயலாளராக்கினார் முதல்வர் ஜெயலலிதா.
இதற்காக தனது மத்திய அரசின் செயலாளர் பதவியை விட்டுவிட்டு தமிழகம் வந்தார் சங்கர்.
ஓராண்டு காலம் பிரச்சனையில்லாமல் கழிந்தது. ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகியபோது பொம்மைமுதல்வர் பன்னீர்செல்வத்தை வைத்துக் கொண்டு நிர்வாகத்தை சிறப்பாக நடத்தினார் சங்கர்.
ஆனால், சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கருக்கு குழி பறித்தனர். அதிகாரிகள்மட்டத்தில் சாதிரீதியில் ஒரு பிரிவினர் அதிக பலம் பெற்றனர். இதனால், சங்கர் போன்ற மூத்த அதிகாரிகளுக்குதமிழக அரசிடம் மரியாதை குறைந்துவிட்டது.
சசிகலா மற்றும் அந்தக் குடும்பத்தினருக்கு ஜால்ரா போடும் அதிகாரிகள் தான் முக்கிய அந்தஸ்தில் உள்ளனர்.தன்னை விட கீழான அதிகாரிகள் தன்னை மட்டம் தட்டுவதைப் பொறுக்க முடியாத சங்கர் இது தொடர்பாகஜெயலலிதாவிடம் வெளிப்படையாகவே தனது மன வருத்தத்தைக் கூறிவிட்டு தலைமைச் செயலாளர் பதவியைராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்.
அவர் ஐ.ஏ.எஸ். பதவியில் இருந்த வி.ஆர்.எஸ். பெறுவார் என்று ஜெயலலிதாவும் சசிகலா ஆதரவு அதிகாரிகளும்நினைத்துக் கொண்டிருந்தபோது தனது காஞ்சி மடத்தின் தொடர்புகளைப் பயன்படுத்தி மீண்டும் மத்திய அரசுப்பணியில் முக்கிய இடம் பிடித்துக் காட்டினார் சங்கர்.
திட்டக் கமிஷன் செயலாளராக அவரை வாஜ்பாய் நியமித்த போது முதல்வர் ஜெயலலிதா எரிச்சலடைந்தார்.ஆனால், அதை அவர் காட்டிக் கொள்ளவில்லை.
இந் நிலையில் இப்போது அவரை லஞ்ச, லாவண்யத்தை ஒழிக்கும் முக்கியமான கமிஷனின் தலைவராகநியமித்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசில் பெட்ரோலித்துறை, உணவுத்துறை போன்ற மிக முக்கிய துறைகளின் செயலாளராகப் பணியாற்றியஇவருக்கு மிக நேர்மையான அதிகாரி என்ற பெயர் உண்டு. இவருக்கு இது பொருத்தமான பதவி தான்.இதன்மூலம் தமிழக முதல்வருக்கும் செக் வைத்துள்ளது மத்திய அரசு.
வாஜ்பாய், அத்வானி மற்றும் சோனியா காந்தி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து என்னுடைய 36 ஆண்டுசேவைக்கான கவுரவத்தைக் கொடுத்துள்ளனர் என்று பின்னர் நிருபர்களிடம் சங்கர் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications