கோர்ட் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு: பொதுமக்கள், வக்கீல்கள் கடும் பாதிப்பு
சென்னை:
நீதிமன்றக் கட்டணங்களை தமிழக அரசு திடீரென கடுமையாக உயர்த்தியுள்ளது. இதனால் வழக்கு தாக்கல் செய்யவந்த வக்கீல்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கோர்ட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாக நேற்று (புதன்கிழமை) காலை திடீரென சுற்றறிக்கை வந்தது.இதனால் வக்கீல்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதேபோல, வழக்குத் தாக்கல் செய்ய வந்த பொதுமக்களும்அதிர்ந்தனர்.
மேலும், புதிய கட்டணம் கடுமையாக இருந்ததால் வக்கீல்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்குஆதரவாக பொதுமக்களும் கோர்ட் வளாகங்களில் குரல் கொடுத்தனர்.
முன்பிருந்த கட்டணத்தை விட பல மடங்கு அளவுக்குப் புதிய கட்டணம் உள்ளது. பொது நலன் கருதி தாக்கல்செய்யப்படும் ரிட் மனுக்களுக்கு இதுவரை ரூ.50 பதிவுக் கட்டணமாக இருந்தது. இது இப்போது ரூ.500 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல ஒவ்வொரு கட்டணமும் பல மடங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளன.
புதிய கட்டணத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் உடனடியாக வருவாய்த்துறை அமைச்சர் தளவாய்சுந்தரத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
இன்று சட்டத்துறை அமைச்சர் பொன்னையனை சந்தித்து மனு கொடுக்கவுள்ளனர். முதல்வரையும் வக்கீல்கள்சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications