ரஜினியின் ஆதரவை கோருவோம்: காங்கிரஸ்
சென்னை:
ஜெயலலிதாவுடன் இனி கூட்டணி அமைக்க மாட்டோம். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில்காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைத்து அந்த அணிக்கு ரஜினிகாந்தின் ஆதரவு கோரப்படும் எனகாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
இது குறித்து இன்று சென்னையில் நிருபர்களிடம் இளங்கோவன் கூறுகையில்,
மதுரையில சமீபத்தில் நடந்த காங்கிரஸ்-தமாகா இணைப்பு விழாவின் போது தமிழகத்தில் விரைவில் காமராஜர்ஆட்சி அமையும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியிருந்தார்.
இதை ஜெயலலிதா கிண்டல் செய்துள்ளார். ஜனநாயக நாட்டில் கனவு காண்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு.அந்த வகையில் சோனியாவும் தாராளமாகக் கனவு காணலாம் என்று ஜெயலலிதா கேவலமாகப் பேசியுள்ளார்.
தானே அடிக்கடி பகல் கனவு காண்பதும், அந்தக் கனவில் தானே அடிக்கடி தோன்றி மறைவதும் யார் என்பதுதமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
கடந்த 1996ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று ஜெயலலிதாகனவு கண்டு கொண்டிருந்தார். ஆனால் நடந்தது என்ன? அந்தக் கனவு பலித்ததா?
ஆனால் சோனியா காந்தியோ நினைத்ததை முடித்துக் காட்டுபவர். காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற சிலஆண்டுகளிலேயே தற்போது 14 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வந்து காண்பித்துள்ளார்.
அதே போல் தமிழகத்திலும் விரைவில் காங்கிரஸ் தலைமையிலான காமராஜர் ஆட்சியை சோனியா நிச்சயம்கொண்டு வருவார். அதற்கு தமிழக மக்களும் ஆதரவு அளிப்பார்கள்.
மேலும் காங்கிரஸ் தலைமையில் அடுத்த தேர்தலில் 3வது அணி அமையும். அதில் இடது சாரி கம்யூனிஸ்ட்கட்சிகளும் பங்கேற்கும்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்தைக் கோருவோம் என்றார் இளங்கோவன்.
பாபா படத்துக்கு எதிராக ராமதாஸ் பிரச்சனை கிளப்பியதை எதிர்த்து ரஜினிக்கு ஆதரவாக காங்கிரஸ் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications