வருகிறார்கள் கெளரவ ஆசிரியர்கள்
சென்னை:
தமிழகத்தில் அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் போராட்டம் இன்று 4வது நாளை எட்டியது. இதனால் அரசுக் கல்லூரிகள் கடந்த நான்குநாட்களாக ஸ்த்ம்பித்துப் போய் உள்ளன.
இந் நிலையில் இந்தப் போராட்டத்தை முறியடிக்க அரசுக் கல்லூரிகளுக்கு உடனடியா 720 கெளரவ ஆசிரியர்களை (Honorary lecturers)நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அரசுக் கல்லூரிகளில் 720 ஆசியர்கள் பதவி காலியாக இருந்து வருகிறது. இதுவரை இந்த இடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல்இருந்து வந்த தமிழக அரசு இப்போது அவசர அவசரமாக ஆசிரியர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.
அவர்களையும் கெளரவ ஊதியத்தில் நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஆசிரியர்கள் போராட்டத்தை முறியடிக்க முயற்சிக்கிறது.ஆனால், திடீரென நியமிக்கப்படும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வி போதித்துவிட முடியுமா என்றுதெரியவில்லை.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.கல்விக் கட்டணம் உயரும் என்பதால் மாணவர்களும் இந்தப் போராட்டத்தை ஆதரித்துள்ளனர். மாணவர்களும்ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கெளர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் மாணவர்கள் அவர்களது வகுப்புகளுக்குச் செல்வார்களா என்பதுசந்தேகம் தான்.
இந் நிலையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று அரசுக் கல்லூரி ஆசிரியர் போட்டக்குழுவின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடக்கிறது.
இதன் தலைவர் தலைவர் சுவாமிநாதன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், போராட்டத்தைமதிக்காமல் அரசு தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொண்டால் போராட்டம் மிகவும் தீவிரமடையும் எனஎச்சரித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications