For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன் பதுங்கியிப்பதாக சந்தேகம்: திம்பம் மலைப் பகுதி சுற்றி வளைப்பு

By Staff
Google Oneindia Tamil News

கொள்ளேகால்:

நாகப்பா கடத்தப்பட்டு மூன்று நாள் ஆகிவிட்ட நிலையில் அவனைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதிரடிப் படையினருடன் ஆலோசனை நடத்தவும் அவர்களுக்கு கூடுதல் படைகள் தேவையா என்பது குறித்து ஆலோசிக்கவும்தமிழக காவல்துறை டி.ஜி.பி. நெயில்வாலும் முன்னாள் அதிரடிப்படை டி.ஐ.ஜியும் இப்போதைய சென்னை போலீஸ்கமிஷனருமான விஜய்குமாரும் இன்று விமானம் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் அங்கிருந்து சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்குச் செல்வார்கள். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசியநெயில்வால், வீரப்பனுடன் 2 அல்லது 3 பேர் தான் உள்ளனர். மற்றவர்கள் கூலிகள் தான். வேலை முடிந்தவுடன் அவர்கள்வீரப்பனை விட்டு விலகிவிடுகிறார்கள். அவனைப் பிடிப்பது குறித்து தேவாரத்துடன் ஆலோசிப்பேன். அங்கு நேரில் சென்றால்தான் நிலைமை முழுமையாகப் புரியும் என்றார்.

விஜய்குமார் கூறுகையில், நான் இப்போது ஆலோசனைகளுக்காகத் தான் செல்கிறேன். அரசு உத்தரவிட்டால் மீண்டும்அதிரடிப்படையில் சேர்ந்து காட்டுப் பகுதியில் பணியாற்றத் தயார் என்றார்.

வீரப்பனுக்கு வரும் ஆயுதங்கள்:

இதற்கிடையே வீரப்பனுக்கு தமிழ் தீவிரவாதிகள் மூலம் தொடர்ந்து ஆயுதங்கள் கிடைத்துக் கொண்டிருப்பதாக உளவுப் பிரிவுபோலீசார் தெரிவித்தனர்.

வீரப்பனின் காட்டுப் பகுதி 16,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. நாகாலாந்து மாநிலமே இந்த அளவு தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. தமிழகம், கர்நாடகம், கேரளம் என மூன்று மாநிலங்களிலும் பரவியுள்ள இந்தக் காட்டுப் பகுதியில் 11மாவட்டங்கள் உள்ளன.

56 வயதான முனுசாமி கவுண்டர் என்ற வீரப்பனை கடந்த 15 ஆண்டுகளாக மூன்று மாநில போலீசாரும் தேடி வருகின்றனர்.

குண்டால் முகாமில் தேவாரம்:

இதற்கிடையே தமிழக அதிரடிப் படையின் தலைவர் தேவாரம் இன்று நாகப்பா கடத்தப்பட்ட காமகெரே பகுதிக்கு அருகே உள்ளகர்நாடகக் காட்டுப் பகுதிக்கு வந்தார். குண்டால் மலைப் பகுதி முகாமில் அவர் கர்நாடக அதிரடிப்படையின் தலைவர் ஆர்.பி.சர்மாவுடன் இணைந்து இரு மாநிலப் படையினரையும் ஒருங்கிணைத்து வருகிறார்.

திம்பம் மலைப் பகுதியை அவர் நான்கு புறமும் சுற்றி வளைக்க உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் இந்தப் பகுதியில்வீரப்பன் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. காமகெரேயில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள திம்பல் மலைப் பகுதிக்குள் தான்அவன் இருக்க வேண்டும். 3 நாளில் நாகப்பாவையும் இழுத்துக் கொண்டு அதற்கு மேல் அவன் சென்றிருக்க முடியாது எனநம்பப்படுகிறது.

சாம்ராஜ்நகரில் பந்த்:

இதற்கிடையே நாகப்பா கடத்தப்பட்டதைக் கண்டித்து கர்நாடகத்தில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள யெலந்தூர்,குண்டூல்பேட், சந்தாமரஹள்ளி, டி.நர்சிபூர் ஆகிய இடங்களில் இன்று பந்த் நடந்து வருகிறது.

அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்கு நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்தை தமிழகம் இன்னும்ஆரம்பிக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X