Kerala Lottery: ரூ.12 கோடி.. யாருக்கு அடிக்க போகுது அதிர்ஷ்டம்? கேரள விஷு பம்பர் லாட்டரி டிக்கெட் இன்று குலுக்கல்
திருவனந்தபுரம்: கேரளா விஷு பம்பர் லாட்டரி குலுக்கல் இன்று நடைபெறுகிறது. ரூ.12 கோடி முதல் பரிசு என்பதால் பரிசு யாருக்கு விழும் என்ற எதிர்பார்ப்பில் கேரள சேட்டன்கள் இருந்து வருகிறார்கள். இரண்டாவது பரிசு ரூ.1 கோடி 6 பேருக்கு வழங்கப்படுகிறது. மூன்றாவது பரிசு ரூ.10 லட்சம் 6 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இன்று பிற்பகல் குலுக்கல் நடக்கும் நிலையில் வின்னர் யார் என தெரிந்துவிடும்.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. லாட்டரி டிக்கெட்டுகளால் ஏழை எளிய மக்கள் தங்கள் சம்பாதித்த பணத்தை இழந்து நிம்மதியை தொலைத்ததால், தமிழ்நாட்டில் கடந்த 2003 ஆம் ஆண்டு லாட்டரிக்கு அரசு தடை விதித்துள்ளது.

கேரள விஷு பம்பர் லாட்டரி குலுக்கல்
இருந்தாலும் கேரளாவில் மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. அங்கு தினம் தோறும் லாட்டரி குலுக்கல் மட்டுமின்றி வருடத்திற்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளின் குலுக்கலும் நடைபெறுகிறது. சீசனுக்கு ஏற்றார் போல் பம்பர் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது விஷு பம்பர் டிக்கெட் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டிற்கான முதல் பரிசு ரூ.12 கோடியாகும். கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு விஷு பம்பர் லாட்டரி டிக்கெட்டின் விற்பனை 44 லட்சத்தை தாண்டியுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 11,55,210 டிக்கெட்டுகள் விற்றுள்ளன. மொத்தம் 45 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன.
பரிசு விவரங்கள் முழுமையாக
கடந்த ஆண்டு விற்பனை 42,87,350 டிக்கெட்டுகள் விற்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெறுகிறது. முதல் பரிசாக ரூ.12 கோடி மட்டுமின்றி இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி ஆறு டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
ஆறுதல் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. மூன்றாவது பரிசு ரூ.10 லட்சம் 6 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது. ரூ.300 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு ரூ.5,000, ரூ.2,000, ரூ.1000, ரூ.500, ரூ.300 போன்ற குறைந்த அளவிலான பரிசும் வழங்கப்படுகிறது. லாட்டரி டிக்கெட் வாங்கிய கேரள லாட்டரி பிரியர்கள், முதல் பரிசு நமக்கு அடித்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு எந்த ஊருக்கு அடித்தது?
கடந்த ஆண்டு விஷு பம்பர் லாட்டரியில் VD 204266 என்ற எண்ணுக்கு முதல் பரிசு அடித்து இருந்தது. கோழிக்கோட்டில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்து இருந்தது. எனவே இந்த ஆண்டு எந்த ஊரில் வாங்கிய டிக்கெட்டிற்கு அடிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் கேரள சேட்டன்கள் உள்ளன.
கேரளாவில் தமிழக எல்லையோர மாவட்டமான பாலக்காட்டில்தான் அதிக முறை பரிசு அடித்து இருப்பதாக கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் பேசப்படும் நிலையில், இந்த முறையும் அங்குதான் பரிசு அடிக்குமா? இல்லை வேறு ஊர்களில் வாங்கிய டிக்கெட்டிற்கு முதல் பரிசு விழுமா? என ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் கேரள லாட்டரி பிரியர்கள். 12 கோடி ரூபாயை தட்டி தூக்க போகும் அதிர்ஷ்ட சாலி யார் என்பது இன்று பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்..














Click it and Unblock the Notifications