வீரப்பனை பிடிக்க 25 ஆந்திர கமாண்டோ வீரர்கள் வருகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாதேஸ்வரன் மலை:

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்தியுள்ள சந்தன வீரப்பனைப் பிடிப்பதற்காக ஆந்திராவில்சிறப்புப் பயிற்சி பெற்ற 25 கமாண்டோ வீரர்கள் மாதேஸ்வரன் மலைப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

கர்நாடக அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த கமாண்டோ வீரர்களை வீரப்பன் தேடுதல் வேட்டைக்குஅனுப்பியுள்ளதாக ஆந்திராவின் சித்தூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திராவில் நக்சலைட் தீவிரவாதிகளைப் பிடிப்பதில் இந்தக் கமாண்டோ வீரர்கள் சிறப்புடன் செயல்பட்டுவந்தனர்.

இந்த 25 கமாண்டோ வீரர்களும் மாதேஸ்வரன் மலைப் பகுதியில் இருந்து கொண்டு வீரப்பனைப் பிடிப்பதில்கர்நாடக அதிரடிப்படையினருக்கு உதவுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

நாகப்பா கடத்தலுக்கும் ஆந்திர நக்சலைட்டுகளுக்கும் தொடர்பு உள்ளதா என்று கேட்டதற்கு, இதுகுறித்துஇப்போதைக்கு எதையும் திட்டவட்டமாகக் கூற முடியாது என்று சித்தூர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற