தமிழர்களிடம் நாகப்பா மனைவி கதறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மைசூர்:

என் கணவரைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டும் தான் முடியும் என்று சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடகமுன்னாள் அமைச்சர் நாகப்பாவின் மனைவி பரிமளா கண்ணீருடன் கூறினார்.

கொள்ளேகால் தாலுகா தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் பரிமளாவைச் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போதுஅவர்களிடம் பரிமளா கூறுகையில்,

கடந்த மூன்று நாட்களாக தமிழர்கள் தினமும் வந்து எங்களுக்கு ஆறுதல் கூறிச் செல்கின்றனர்.

தமிழர்களால் தான் என் கணவரைக் காப்பாற்ற முடியும். அவர்கள் தான் அவரை மீட்டு வருவதற்கு உதவி செய்யவேண்டும்.

நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது தமிழர்கள் தான் அவரை காட்டுக்குள் சென்று வீரப்பனிடமிருந்து மீட்டுவந்தனர். அதே நம்பிக்கை இப்போது எங்களிடமும் உள்ளது.

ராஜ்குமாரை மீட்டது போலவே என் கணவரையும் மீட்டு வர தமிழர்கள் முன் வர வேண்டும் என்று கண்ணீருடன்பரிமளா கூறினார்.

ரேடியோ மூலம் வீரப்பனிடம் கோரிக்கை:

தன் கணவரை விட்டு விடுமாறு ரேடியோ மூலமும் பரிமளா வீரப்பனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவருடையபேச்சு இன்றும் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டது.

அவர் ரேடியோவில் பேசுகையில்,

0என்னுடைய கணவர் உடல்நிலை சரியில்லாதவர். சர்க்கரை வியாதியாலும் அவதிப்படுகிறார்.

மனிதாபிமானம் மிக்க வீரப்பன் அவர்களே, நீங்கள் அவருக்கு தயவு செய்து எந்தவிதமான தொந்தரவையும்கொடுக்க வேண்டாம்.

நாங்கள் உங்களுக்கு எந்தவிதமான தொந்தரவையும் கொடுக்கவில்லை. எனவே என்னை உங்கள் சகோதரி போலநினைத்துக் கொண்டு என்னுடைய கணவரை உடனே விட்டு விடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

அதேபோல் தன்னுடைய கணவர் நாகப்பாவுக்கும் ரேடியோ மூலம் பரிமளா தகவல் அனுப்பினார்.

உங்கள் உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சர்க்கரை வியாதிக்காரர் என்பதை மறந்துவிடவேண்டாம். வேளாவேளைக்கு மாத்திரையைத் தவறாமல் சாப்பிடுங்கள். "பஞ்சாக்சரி மந்திர"த்தை தினமும்சொல்லிக் கொண்டே இருங்கள். எந்தெந்த மாத்திரையை எப்போது சாப்பிட வேண்டும் என்று மாத்திரைகளின்பெயர்களையும் அவர் தெரியப்படுத்தினார்.

ஜெ.க்கு தாய் கோரிக்கை:

இதற்கிடையே தன் மகனை வீரப்பனிடமிருந்து மீட்டுத் தருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நாகப்பாவின்தாயார் பர்வதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

பர்வதம்மாள் நிருபர்களிடம் கண்ணீருடன் கூறியதாவது:

சமீபத்தில் தான் என் கணவர் இறந்தார். அதிலிருந்து என் மகன் தான் வீட்டின் அனைத்துப் பொறுப்புக்களையும்கவனித்து வந்தான். தினமும் ஒரு முறையாவது அவனால் என்னைப் பார்க்காமல் இருக்க முடியாது. என்னாலும்அவனைப் பார்க்காமல் இருப்பதே மிகவும் கஷ்டமான காரியம் தான்.

உடல் நலம் சரியில்லாத அவனை உடனடியாக விட்டு விடும்படி வீரப்பனைக் கேட்டுக் கொள்கிறேன்.இப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் உதவி மிகவும் அவசியம். என் மகனை மீட்பதற்கான அனைத்துஉதவிகளையும் அவர் செய்ய வேண்டும். அவனை எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் மீட்டுத் தர வேண்டும்என்று கூறினார் பர்வதம்மாள்.

கிருஷ்ணாவுடன் சந்திப்பு:

இதற்கிடையே இன்று காலை கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவைச் சந்தித்த நாகப்பாவின் மகன் ப்ரீதம், மகள் பவன்ஆகியோர் தங்கள் தந்தையை விரைவில் மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

அவர்களுக்கு ஆறுதல் கூறிய கிருஷ்ணா, நாகப்பாவை மீட்பதற்கு அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும்விளக்கிக் கூறினார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற