கட்சிக்கு தடை விதித்ததை எதிர்த்து நெடுமாறன் வழக்கு
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத்திற்குத் தடை விதித்ததை எதிர்த்து அதன் தலைவர் பழ. நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
நெடுமாறன் கடந்த 1ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவரது கட்சியான தமிழர் தேசிய இயக்கத்துக்கும் பின்னர் தடை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 25ம் தேதி அவருடைய கட்சி அலுவலகமும் பத்திரிக்கை அலுவலகமும் போலீசாரால் சீல்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தனது கட்சியை தமிழக அரசு தடை செய்தது சட்ட விரோதமானது என்று அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் நெடுமாறன் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
கிரிமினல் திருத்தச் சட்டம் 15(2), 16(1) ஆகிய பிரிவுகளின் கீழ் எனது அரசியல் கட்சியைத் தடை செய்ததுசெல்லாது என்று கோர்ட் அறிவிக்க வேண்டும். இந்தப் பிரிவுகளையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் தமிழர்களின் துயர் குறித்து தான் எனது கட்சி பிரசாரம் செய்து வந்தது. மக்களிடமும் எடுத்துவைத்தது. பேச்சுரிமை ஜனநாயகத்தின் முக்கிய அம்சம். எனது கட்சிக்கு எதிராக அரசு கூறியுள்ள வாதங்கள்அனைத்தும் தவறானவை, அடிப்படை இல்லாதவை, சட்டவிரோதமானவை.
எனது கட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை. மேலும், இந்தியாவில் உள்ள எந்தப்பகுதியையும் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்று நாங்கள் கூறியதுமில்லை. இது மாதிரியான கருத்தை எனதுகட்சியினரும் எங்கும் கூறியதில்லை.
அரசு நடவடிக்கை ஒரு அதிகார துஷ்பிரயோகம். எனவே அரசின் தடையுத்தரவை செல்லாது என்று கோர்டஅறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார் நெடுமாறன்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி தினகரன், அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்குஒத்திவைத்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications