கர்நாடக அதிரடிப்படை வேட்டை தாற்காலிகமாக நிறுத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட நாகப்பாவின் குடும்பத்தினரைச் சந்திக்க கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இன்று காமகெரே செல்கிறார்.

ஹெலிகாப்டர் மூலம் சாம்ராஜ்நகர் செல்லும் அவர் அங்கிருந்து கார் மூலம் காடடுப் பகுதியை ஒட்டியுள்ள காமகெரே சென்று நாகப்பாவின்குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

நாகப்பாவை மீட்க அவரது லிங்காயத்து ஜாதி அரசியல்வாதிகள் ஒக்கலிகா ஜாதியைச் சேர்ந்த முதல்வர் கிருஷ்ணாவுக்கு பெரும் அரசியல்நெருக்கடி தர ஆரம்பித்துள்ளனர். இதனால் தூதரைத் தயார் செய்துவிட்ட கிருஷ்ணா ஜாதிரீதியிலும் அரசியல்ரீதியிலும் ஏற்பட்டுள்ளசவாலை சமாளிக்க நாகப்பாவின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்கிறார்.

பின்னர் அவர் குண்டால் காட்டுப் பகுதியில் முகாமிட்டுள்ள கர்நாடக டி.ஜி.பி. பாஸ்கர், கர்நாடக அதிரடிப் படையின் தலைவர் ஆர்.பி.சர்மா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சம்ராஜ்நகரில் ஆலோசனை நடத்துகிறார்.

டி.ஜி.பி. பேட்டி:

குண்டால் மலைப் பகுதியில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக டி.ஜி.பி. பாஸ்கர், தமிழக அதிரடிப் படையினர் எங்களுக்கு முழு ஒத்துழைப்புதந்து வருகின்றனர்.

வீரப்பனுக்கு தூது அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதால் அதிரடிப் படையின் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு எங்களுக்கு எந்தஉத்தரவும் அரசிடம் இருந்து வரவில்லை. உண்மையில் தேடுதல் வேட்டை மிகத் தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.

கர்நாடக அதிரடிப் படை செயல்பாடு வாபஸ்?:

ஆனால், வீரப்பனிடம் இருந்து வந்த இரண்டாவது கேசட்டில் அதிரடிப் படையின் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படாவிட்டால்நாகப்பாவின் தலையை துண்டிப்பேன் என்ற கடும் எச்சரிக்கை இருப்பதால் கர்நாடகம் தனது அதிரடிப்படையினரின் வேகத்தைக் குறைக்கஆரம்பித்துள்ளது.

சில இடங்களில் இருந்து படைகளை வாபசும் பெற்றுவிட்டது. கர்நாடக அதிரடிப்படை தனது தேடுதல் வேட்டையை தாற்காலிகமாகமுழுவதும் நிறுத்திவிடும் என்று தெரிகிறது.

கர்நாடக எல்லையில் வீரப்பன்:

இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக சத்தியமங்கலம் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் தமிழக அதிரடிப் படையின் பல்வேறுமுகாம்களை நேரில் சென்று பார்வையிட்ட தமிழக டி.ஜி.பி. நெயில்வால் இன்று சென்னை திரும்பினார்.

அவர் கூறுகையில், வீரப்பன் இன்னும் கர்நாடக காட்டுப் பகுதியில் தான் இருக்கிறான். தமிழக வனப் பகுதியில் நுழையவில்லை. தமிழகஎல்லைப் பகுதியில் அதிரடிப் படையினர் இரவு பகலாக கண்காணிப்பில் உள்ளனர். அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டதுஅதிரடிப்படை. இதனால் அவனால் இங்கு நுழைய முடியாது.

அதிரடிப் படை வீரர்களின் மனோபலமும் தாக்குதல் திறனும் மிகச் சிறப்பாக உள்ளது என்றார்.

அத்வானி உறுதி:

இந் நிலையில் நாகப்பாவை மீட்க கர்நாடக அரசுக்கு உதவக் கோரி ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் துணைப் பிரதமர் அத்வானியைஇன்று நேரில் சென்று வலியுறுத்தினர். அப்போது ஹெலிகாப்டர்கள் உள்பட அனைத்துக் கருவிகளையும் தேவைப்பட்டால் படைகளையும்வழங்கி உதவுவதாக அவர்களிடம் அத்வானி உறுதியளித்தார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற