ராமநாதபுரம் அருகே கார்-லாரி மோதல்: அதிமுக செயலாளர் உள்பட 3 பேர் பலி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே டாடா சுமோ காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் அந்நகர அதிமுகசெயலாளர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் நகர அதிமுக செயலாளரான வேலு தன்னுடைய நண்பர்களுடன் டாடா சுமோ காரில் சென்றுகொண்டிருந்தார்.
வாலாந்துறை அருகே சென்று கொண்டிருந்த போது அந்தக் கார் மீது செங்கல் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர்பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் டாடா சுமோ கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் வேலு உள்பட 3 பேர் உடல் நசுங்கிபரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி:
இதற்கிடையே சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன்மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த ஒரு டெம்போ படு வேகத்துடன் மோட்டார் சைக்கிளில்மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மூவருமே லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications