சென்னை மாநகராட்சி கலவரம்: விசாரணைக் கமிஷன் அமைப்பு
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் மீது நடந்த பயங்கர தாக்குதல் குறித்து விசாரிக்க ஒருநபர் கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை திமுக-அதிமுக கவுன்சிலர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது சோடாபாட்டில்கள், மைக்குகள், நாற்கிலிகள் வீசப்பட்டன. கத்திகளும் பறந்தன. இதில் திமுக பெண் கவுன்சிலர் செல்வி செளந்தரராஜன்உள்பட 4 கவுன்சிலர்கள் மண்டை உடைந்தது. உதடு கிழிந்தது.
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சாலைபோட டெண்டர்கள் விடப்பட்டதில் அதிமுகவினர் 10 சதவீதம் கமிஷன் அடித்துள்ளதாக திமுகவினர் புகார்கூறியதையடுத்து இந்தத் தாக்குதல் நடந்தது. தங்களை அதிமுகவினர் மட்டுமல்லாமல் சில ரெளடிகளும் உள்ளேபுகுந்து தாக்கியதாக திமுக கவுன்சிலர்கள் புகார் கூறினர்.
இது தொடர்பாக நேற்று தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவை திமுக கவுன்சிலர்ககளும் தலைவர்களும் நேற்றுநேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும், மாநகராட்சியில் ஜனநாயகரீதியில் செயல்பட அனுமதிக்க வேண்டும்எனவும் ஆளுநரிடம் திமுகவினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து இந்த மோதல் குறித்து ஆளுநர் தரப்பில் இருந்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகத்தெரிகிறது.
இதைத் தொடர்ந்து இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த கமிஷன் ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது. ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.நடராஜன் தலைமையில் இந்தக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் நடந்த மோதல் குறித்து விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல்செய்யுமாறு இந்தக் கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கமிஷனின் அறிக்கை கிடைத்த பின்னர் மாநகராட்சி மோதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனதமிழக அரசு கூறியுள்ளது.
ஸ்டாலின் பேட்டி:
இதற்கிடையே மாநகராட்சியில் நடந்த கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள திமுக கவுன்சிலர்களை அக் கட்சியின் முன்னாள்மேயர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று சந்தித்தார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், ஆளும் கட்சியினர் மீது ஊழல் புகார் கூறினால் ஒன்று அதை மறுத்துப் பேச வேண்டும், இல்லாவிட்டால் அதை ஏற்கவேண்டும். அதை விட்டுவிட்டு புகார் கூறியவர்களைத் தாக்குவது என்பது வெட்கம் கெட்ட செயல்.
அராஜகம் மூலம் திமுகவினரை ஒடுக்கிவிட முடியும் என அதிமுகவினர் நினைக்கின்றனர். அன்றைய தினம் உள்ளே வந்த திமுகவினரை போலீசார்சோதனையிட்டனர். ஆனால், அதிமுகவினரை சோதனை செய்யாமல் அனுப்பினர்.
அந்த நிலையில் தான் திமுகவினர் மீது கத்தி, பாட்டில்களால் தாக்குதல் நடந்தது. இதனால் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதில் எந்தசந்தேகமும் இல்லை என்றார் ஸ்டாலின்.
கராத்தே மறுப்பு:
திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மாநகராட்சி இடம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தை திசை திருப்பவேதிமுகவினர் திட்டமிட்டு தாக்கப்பட்டது போல நாடகமாடுவதாக மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், அன்றைய தினம் திமுகவினரை பேசவே அனுமதிக்கவில்லை என்று சொல்வது தவறு. அவர்கள் பேசியதுஅவைக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது. அண்ணா அறிவாலய நில ஆக்கிரமிப்புப் பிரச்சனையை திசை திருப்பவே திமுகவினர் இது போன்றுநாடகமாடுகின்றனர்.
மேலும் அன்று 42 தீர்மானங்கள் போதிய மெஜாரிட்டி இல்லாமலேயே என்னால் நிறைவேற்றப்பட்டதாக கூறுவதும் தவறு. காங்கிரஸ்கவுன்சிலர்கள்ஆதரவுடன் தான் அவை நிறைவேறின என்றார்.ஆனால், சோனியா காந்தியை ஜெயலலிதா விமர்சித்ததில் இருந்தே அதிமுகவுடன் எந்தவிதமான ஒட்டும் உறவும் இல்லை என காங்கிரஸ்அறிவித்துவிட்டது. இதனால் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தந்ததாக கராத்தே சொல்வதை ஏற்க முடியவில்லை.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications