காவிரி: கர்நாடகத்தின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் நிராகரிப்பு
டெல்லி:
காவிரி வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த 4 வாரத்திற்குத் தள்ளி வைக்குமாறு கர்நாடக அரசு விடுத்தகோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இன்றுவிசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது இவ்வழக்கு விசாரணையை அடுத்த நான்கு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றுகர்நாடக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜாவெலி கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவரை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வேணுகோபால், ஏற்கனவே காவிரியில்கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததால் தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யாமல், தற்போது சம்பாசாகுபடி செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். எனவே எக்காரணத்தைக் கொண்டும் விசாரணையைத்தள்ளிவைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.என். கிர்பால் தலைமையிலான பெஞ்ச்,கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்தது.
மேலும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி விவகாரம் ஒரு முக்கியமான பிரச்சனை என்பதால்காவிரி நதியை அரசியல் சாசனத்தின் முக்கியப் பட்டியலில் சேர்க்க வழியுள்ளதா என்றும் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
ஒரு நதியிலிருந்து தண்ணீரைப் பகிர்ந்து பெறுவதில் மாநிலங்களுக்கிடையே எப்போதும் பிரச்சனை எழக்கூடும்என்பதால் நாட்டில் உள்ள அனைத்து நதிகளையுமே அரசியல் சாசனப் பட்டியலில் சேர்க்க முடியுமா என்றும் உச்சநீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது.
பின்னர் இவ்வழக்கின் விசாரணை நாளைக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications