குஜராத்: தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
டெல்லி:
குஜராத்தில் உடனடியாக தேர்தலை நடத்த முடியாது என்ற தேர்தல் கமிஷனின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது.
வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அங்கு தாராளமாகத் தேர்தலை நடத்தலாம் என்றும் உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி பி.என். கிர்பால் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்தது.
குஜராத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசு இன்னும் நிவாரணப் பணிகளைமேற்கொள்ளவில்லை என்பதால் அங்கு தற்போது தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை என்று தேர்தல் கமிஷன்தெரிவித்து விட்டது.
தேர்தல் தேதி குறித்து டிசம்பரில் முடிவு செய்யலாம் என்றும் இதனால் அக்டோபர் 2ம் தேதிக்குப் பின் (சட்டசபைகாலக்கெடு முடியும் நாள்) குஜராத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குமாறும் தேர்தல் கமிஷன் மத்திய அரசுக்குபரிந்துரை செய்தது.
உடனே தேர்தல் நடத்தி அரசியல் லாபம் பார்க்க நினைத்த பா.ஜ.க. தேர்தல் கமிஷனின் இந்த முடிவை எதிர்த்துஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ஒப்புதலுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், குஜராத் விவகாரம் தொடர்பாக வரும்அக்டோபர் 2ம் தேதிக்குள் எங்கள் தீர்ப்பை வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை ஏற்கமுடியாது.
அங்கு தேர்தலை நவம்பர், டிசம்பரில் நடத்தலாம் என்ற தேர்தல் கமிஷனின் முடிவு சரியானது தான்.
காங்கிரஸ் வரவேற்பு:
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.












Click it and Unblock the Notifications