கூட்டணி: திமுகவிடம் விவரம் கேட்கிறது பா.ஜ.க.
சென்னை:
பா.ஜ.கவுடனான உறவு குறித்து திமுக தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அமைச்சரும் பா.ஜ.க. தமிழகத் தலைவர்களில்ஒருவருமான திருநாவுக்கரசர் கூறினார்.
சமீப காலமாகவே திமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை. தேசிய அளவில் மட்டும் தான் பா.ஜ.கவுடன் கூட்டுதமிழகத்தில் அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அணியில் திமுக இருக்குமா என்பது சந்தேகமாவே உள்ளது.
இந் நிலையில் சமீபத்தில் பா.ஜ.கவில் சேர்ந்து சமீபத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சரானவர் திருநாவுக்கரசர்திமுகவிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
மத்தியில் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து 3 அமைச்சர்களைக் கொண்டுள்ள திமுகவுடன் தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு கூட்டணி இல்லை. இந்தமுரண்பாட்டுக்கு பா.ஜ.க. காரணமல்ல. இதற்கு திமுக தான் விளக்கம் தர வேண்டும்.
பா.ஜ.கவுடனான உறவு குறிதது திமுக தெள்ளத் தெளிவாக விளக்கமளிக்க வேண்டும்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணியில் திமுக இருக்க வேண்டும். அதே போல மாநிலத்திலும் பா.ஜ.கவுடன்கூட்டணியைத் தொடர வேண்டும்.
அதிமுகவுடன் பா.ஜ.கவுக்கு கூட்டணி இல்லை. ஆனால், மத்திய- மாநில அரசுகள் என்ற முறையில் இருவருக்கும் இடையே சுமூக உறவுநிலவுகிறது.
இந்தியாவில் பிறந்த ஒருவர் தான் பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என்ற ஜெயலலிதாவின் நிலையை ஆதரிக்கிறோம். பா.ஜ.க. இதைத் தான்சொல்லி வந்தது. இப்போது ஜெயலலிதாவும் அதை ஆதரிப்பதால் சோனியா தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும்.
உள்ளதைச் சொன்ன ஜெயலலிதாவின் கொடும்பாவியை காங்கிரசார் எரிப்பது நாகரீகமற்ற செயல்.
அதே நேரத்தில் காவிரி விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாய் இரட்டை நிலை எடுத்துள்ளதாக ஜெயலலிதா பேசியிருப்பது தவறு. ஒரு முதல்வர்இப்படி பிரதமரைத் தாக்கிப் பேசக் கூடாது. வாஜ்பாய் ஒருபோதும் இரட்டை நிலை எடுத்தது இல்லை என்பதை நாடறியும்.
தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த உத்தரவை கர்நாடகம் நிறைவேற்றவேண்டும். அதைச் செய்யத் தவறினால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என்றார்.
கூட்டணி விஷயத்தில் திமுக விளக்கம் தர வேண்டும் என்ற திருநாவுக்கரசின் பேச்சு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவையும் அதன்தலைவர் கருணாநிதியையும் நன்கு அறிந்தவர் திருநாவுக்கரசர். மத்தியில் பா.ஜ.க. தலைவர்களின் நெருக்குதல் காரணமாகவே இவர்இவ்வாறு பேசியிருக்கக் கூடும் என்று தெரிகிறது.
மேலும் ஜெயலலிதாவின் கொடும்பாவி எரிப்புக்கு காங்கிரசுக்கு இவர் கண்டனம் தெரிவிப்பதும் கூட அதிமுக- பா.ஜ.க. இடையே ஏதோநடப்பதைத் தான் சுட்டிக் காட்டுகிறது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications