ஆளை விடுங்கம்மா: ஜெவின் 3வது அணி குறித்து கம்யூனிஸ்ட்
டெல்லி:
பா.ஜ.க., காங்கிரசுக்கு எதிராக மூன்றாவது அணி அமைக்கலாம் என்ற ஜெயலலிதாவின் அழைப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநிராகரித்துவிட்டது.
ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரத் தயாராக இல்லை என அந்தக் கட்சி தெளிவுபடுத்திவிட்டது.
அன்னியரான சோனியாவை பிரதமராக அனுமதிக்கக் கூடாது என்றும் சோனியா குறித்த தங்களது கருத்தை மீண்டும் ஆத்ம பரிசோதனைசெய்து பார்க்க வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.
காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக மூன்றாவது அணியை அமைக்க கம்யூனிஸ்ட்கள், சகோதரர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் உள்ளிட்டஎதிர்க் கட்சியினரின் ஆதரவைக் கோரப் போவதாகவும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஆனால், முரண்பாடுகளின் மொத்த உருவமான ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கத் தயாராக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கூறியுள்ளது.
இது குறித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
மதவாதத்தை எதிர்ப்பதில் ஒத்த கருத்து கொண்டவர்கள் இணைந்து தான் கூட்டணி அமைக்க முடியும். தனிப்பட்ட ஒருவருக்கு எதிராக(சோனியாவுக்கு எதிராக) கூட்டணி சேர முடியாது. அதிலும் ஒருவரது பிறந்த நாட்டை மட்டும் பிரச்சனையாக்கி அதன் அடிப்படையில்எல்லாம் அணி அமைக்க முடியாது.
புதிய அணி உருவாக்க ஒரு வரையறை உண்டு. மதவாதம், மக்களுக்கு எதிரான முதலாளித்துவத்துக்கு ஆதரவான பொருளாதாரகொள்கைகள் போன்ற விவகாரங்களை எதிர்த்து தான் கூட்டணி உருவாக்க வேண்டும்.
மக்கள் பிரச்சனைகளில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதன் தலைவர்களும் என்ன கொள்கைகள் வைத்திருக்கிறார்கள் என்பது புதியஅணி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அதைவிட்டு இவர் எங்கே பிறந்தார், அவர் எங்கே பிறந்தார் போன்ற மக்களை திசை திருப்பும்விவகாரங்களை வைத்துக் கொண்டு அணி அமைப்பதில் பலனில்லை.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதன்மூலம் தேசிய அளவில் மூன்றாவது அணி என்ற ஜெயலலிதாவின்திட்டத்துக்கு பெரிய அடி விழுந்துள்ளது. (உண்மையிலேயே அவர் மூன்றாவது அணி அமைப்பதில் தீவிரமாக இருக்கிறாரா என்பதேசந்தேகத்துக்குரியது தான். பா.ஜ.கவுடன் தான் நெருங்குவதை திசை திருப்பவே அவர் இவ்வாறு பேசி வருவதாக எதிர்க் கட்சிகள்திட்டவட்டமாக நம்புகின்றன. பா.ஜ.கவும் ஜெயலலிதாவும் சேர்ந்த இந்த டிராமா போட்டு வருவதாக நம்பப்படுகிறது)
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications