மிகுந்த நம்பிக்கையுடன் திறக்கப்படுகிறது மேட்டூர் அணை
டெல்லி:
காவிரியில் கர்நாடகம் நீரைத் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில் நாளை மறுதினம் மேட்டூர் அணையை விவசாயத்துக்காகதிறந்துவிட தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்துள்ளார்.
கிட்டத்தட்ட 2 மாத கால தாமதத்துக்குப் பின் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி நீர் மட்டம் இன்று 66.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 18.82 கன அடிதண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இந்த நீர் காவிரி டெல்டா விவசாயத்துக்குப் போதுமானது அல்ல. இதனால் நீரைத் திறந்துவிடாமல் இருந்து வந்தது தமிழக அரசு.இதன் காரணமாக தஞ்சை உள்ளிட்ட பல்வேறு காவிரி ஆற்றுப் படுகை மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெல்கருகிப் போய்விட்டது.
ஆனால், இன்று முதல் (புதன்கிழமை) தினமும் தமிழகத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் விட வேண்டும் என கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இதனால் கர்நாடகம் நீரைத் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில் மேட்டூர் அணையை 6ம் தேதி முதல் பாசனத்துக்காக திறந்துவிடமுடிவு செய்துள்ளோம். இதனால் விவசாயிகள் சம்பா நெல் பயிரை பயிரிட முடியும் என இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகம் புறக்கணித்தால் மேட்டூரில் இருந்து செல்லும் நீர் விழலுக்கு இறைத்த நீர் மாதிரிவீணாகிவிடும் என்பது குறிப்பிடத்தத்தது. தொடர்ந்து மேட்டூரில் இருந்து நீர் சென்று கொண்டிருந்தால் மட்டுமே சம்பா நெல்தப்பும்.
ஏற்கனே குறுவை நெல்லை கருக வைத்து தமிழக விவசாயிகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட கர்நாடகம் மீண்டும்தனது புத்தியைக் காட்டாமல் இருக்க வேண்டியது அவசியம்.
7ம் தேதி ஆணையக் கூட்டம்?:
இதற்கிடையே காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை வரும் 7ம் தேதி கூட்டலாம் என பிரதமர் வாஜ்பாய் யோசனைதெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆணையத்தைக் கூட்டி தமிழகத்துக்கு எவ்வளவு நீர் விடுவது என்று பிரதமர் முடிவு செய்ய வேண்டும், அதுவரைதமிழகத்துக்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இந்தக் கூட்டத்தை வரும் 7ம் தேதி கூட்ட வாஜ்பாய் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. சில தினங்களுக்கு முன்நடந்த இதே காவிரி ஆணையக் கூட்டத்தில் தான் தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடகம் கூறியது.
பிரதமர் வாஜ்பாயும் இந்த விஷயத்தில் கர்நாடகத்தை வற்புறுத்தவில்லை, அம் மாநில முதல்வர் சொன்னதை மட்டுமே கேட்டுக்கொண்டார். தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என வாஜ்பாய் உத்தரவிடவில்லை.
இந் நிலையில் மீண்டும் ஆணையத்தைக் கூட்டி தமிழகத்துக்கு எவ்வளவு நீர் விடுவது என்பது குறிதது பிரதமர் வாஜ்பாய் இறுதிமுடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications