வந்தது மழை: சென்னை ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு
சென்னை:
சென்னை நகரில் திடீரென சில நாட்களாக நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் நகருக்கு குடிநீர் வழங்கும்ஏரிகளில் தண்ணீர் மட்டம் வெகுவாக உயரத் தொடங்கியுள்ளது.
சென்னை நகரிலும் சுற்றுப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவுநேரங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்கிறது. பகல் நேரங்களிலும் வெயிலின் கொடுமை குறையஆரம்பித்துள்ளது.
இந்த மழையால் சென்னை மக்கள் மட்டுமல்லாது, குடிநீர் வாரியஅதிகாரிகளும் கூட மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழாவரம், செங்குன்றம் ஆகியஏரிகளில் நீர்மட்டம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது மொத்தம் 235 கோடி கன அடி நீர் இருப்பு உள்ளது. மழை நீடித்தால்நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும்.
இதற்கிடையே, இரவில் பெய்த கன மழை மற்றும் இடி, மின்னலுக்கு நான்கு குடிசை வீடுகள் சேதமடைந்தன. இடிவிழுந்து இந்த நான்கு வீடுகளும் கருகிவிட்டன.
நகரின் தாழ்வான பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. வேளச்சேரி பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் மீது இடிவிழுந்ததில் அந்தப் பகுதியே இருளில் மூழ்கியது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications