டெல்லி சென்றார் கிருஷ்ணா: வாஜ்பாயுடன் சந்திப்பு
டெல்லி:
காவிரி ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்த பிரதமர் வாஜ்பாயை கர்நாடக மாநில எம்.பிக்களுடன் இன்றுசந்திக்கிறார் முதல்வர் கிருஷ்ணா. இதற்காக இன்று காலை கிருஷ்ணா டெல்லி சென்றார்.
முன்னதாக அவர் நேற்றிரவே பிரதமரைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், உடனே டெல்லிக்கு வர வேண்டாம் என கர்நாடகமுதல்வரிடம் பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துவிட்டது.
இதனால் நேற்று மேற்கொள்ள இருந்த தனது டெல்லி பயணத்தை அவர் கடைசி நேரத்தில் ஒத்தி வைத்துவிட்டார். ஆனால், இன்றுஎம்.பிக்களுடன் சென்று பிரதமரை அவர் சந்திக்கிறார்.
இந் நிலையில் நாளை காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டமும் நடக்கிறது. மத்திய நீர்வத்துறை அமைச்சர் தலைமையில் நடக்கும் இந்தக்கூட்டத்தில் வறட்சி காலத்தில் தண்ணீரை பகிர்ந்து கொள்வது குறித்து விவாதிக்கப்படும்.
இந்த கண்காணிப்புக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி இதன் கூட்டங்களை புறக்கணிக்க தமிழகம் திட்டமிட்டிருந்தது.ஆனால், இப்போது உச்ச நீதிமன்ற உத்தரவு இருப்பதால் நாளை நடக்கும் கூட்டத்துக்கு பிரதிநிதிகளை முதல்வர் ஜெயலலிதா அனுப்புவார்என்று தெரிகிறது.
இந்தக் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் முடிந்தவுடன் ஆணையக் கூட்டத்தையும் கூட்டி தமிழகத்துக்கு தண்ணீர் விடுவது தொடர்பாகமுடிவெடுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் தருவது என்பது குறித்து ஆணையக் கூட்டத்தைக் கூட்டி பிரதமர் வாஜ்பாய் இறுதி முடிவு எடுக்கலாம்என்றும் அதுவரை தினமும் 1.25 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்குத் தர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதுநினைவுகூறத்தக்கது.
இதனால் ஆணையத்தை எப்படியாவது மிக விரைவிலேயே கூட்ட வைத்து தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதை நிறுத்த கர்நாடகம் முயன்றுவருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications