மாமூல் வசூலை கண்டித்து திருப்பூர் பனியன் தயாரிப்பாளர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
சோதனை என்ற பெயரில் அதிகாரிகளும் போலீஸாரும் நடத்தும் அடாவடி செயல்களைக் கண்டித்தும், மாமூல்வசூலைக் கண்டித்தும் திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் இன்று உண்ணாவிரதம் மற்றும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
திருப்பூரில் ஏராளமான பனியன் மற்றும் ரெடிமேட் ஆடைத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இங்கு விற்பனை வரி சோதனை என்ற பெயரில் அதிகாரிகளும் போலீஸாரும அடிக்கடி வீண் சோதனைகள்செய்வதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாகவும் பனியன்தயாரிப்பாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
அதிகாரிகள், போலீசாரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில்திருப்பூர் பனியன் தயாரிப்பாளர்கள் இறங்கியுள்ளனர்.
அதேபோல, வரும் 15ம் தேதி ஒரு நாள் பந்த் நடத்தவும் சங்கம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications