கன்னடர் போராட்டம்: ஓசூரில் நிறுத்தப்பட்ட தமிழக பஸ்கள்
ஒசூர்:
பெங்களூர் அருகே கன்னடர் அமைப்பு நடத்திய போராட்டம் காரணமாக தமிழகத்திலிருந்து பெங்களூர் சென்றஅரசுப் பேருந்துகள் அனைத்தும் ஓசூருடன் நிறுத்தப்பட்டன. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவை இரவில்பெங்களூர் புறப்பட்டுச் சென்றன.
வீரப்பனால் நாகப்பா கடத்தப்பட்டதைக் கண்டித்தும், காவிரி விவகாரம் காரணமாகவும் கர்நாடகத்தில் ஆங்காங்குபோராட்டங்கள் நடந்து வருகின்றன.
பல்வேறு கன்னட அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந் நிலையில் பெங்களூர் அருகே உள்ளசந்தாபூரில் நேற்று மாலை கன்னட பார்ஷா என்ற அமைப்பு சாலை மறியலில் இறங்கியது.
ஒசூரிலிருந்து பெங்களூர் வரும் நான்கு வழிப் பாதையை அவர்கள் மறித்தனர். தமிழகத்திலிருந்து வந்த பஸ்கள்,வாகனங்களை திரும்பிச் செல்லுமாறு அவர்கள் மிரட்டினர். மீறியவர்களைத் தாக்கினர். இதையடுத்து அங்குபரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தகவல் ஓசூருக்கு பரவியதும், தமிழகத்திலிருந்து வந்த அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் ஆகியற்றைஓசூருடன் தமிழகப் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகளும், தமிழகத்திற்கு வர வேண்டிய பயணிகளும்பரிதவித்தனர்.
இதையடுத்து பெங்களூர் போலீஸார் தகுந்த பாதுகாப்பு கொடுப்பதாக உறுதி மொழி அளித்தனர். அதையடுத்துஇரவில் பத்து பத்து பஸ்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூர் நோக்கி தமிழக அரசு பஸ்கள்புறப்பட்டுச் சென்றன.
இந்தக் களேபரத்தால் பல மணி நேரம் கர்நாடக, தமிழக எல்லைப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
-->












Click it and Unblock the Notifications