டாக்டர் வராத மருத்துவமனை: கர்ப்பிணி பரிதாப சாவு
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வரப்பட்ட பெண், டாக்டர்கள் இல்லாத காரணத்தால்பிரசவ வலியால் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
கோவை மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாமணி. இவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார்.சனிக்கிழமை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மாலையில் திருப்பூர் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
ஆனால் டாக்டர்கள் யாரும் அப்போது பணியில் இல்லை. உடனடியாக டாக்டரை வரவழையுங்கள் என்றுமருத்துவமனை ஊழியர்களிடம் கூறியபோது அவர்கள், டாக்டர் வர்றப்ப தான் வருவாறு என்று அலட்சியமாகபதில் அளித்தனர்.
இந் நிலையில் சாந்தா மணி பிரசவ வலியால் துடிதுடித்தார். சிறிது நேரத்தில் வலி பொறுக்க முடியாத அவர்துடிதுடித்து இறந்தார். சாந்தா மணியின் உறவினர்கள் இந்த கொடூரத்தைப் பார்த்து கதறி அழுதனர்.
இச் சூழ்நிலையில் இரவு 10 மணிக்கு மேல்தான் டாக்டர்கள் கும்பல் மருத்துவமனைக்கே வந்தது.
பணிக்கு வராத அந்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சாந்தாமணியின் உடலை திருப்பி எடுத்துப்போக மாட்டோம் என்று சாந்தா மணியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications