வீரப்பனுக்கு உளவு சொன்ன சிறுவன் கைது
சத்தியமங்கலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு போலீஸ் நடமாட்டம் குறித்து உளவு சொன்னதாக சிறுவன் ஒருவனை போலீஸார்கைது செய்துள்ளனர்.
அவனிடம் விசாரணை நடத்தியபோது தான் வீரப்பன் மறைந்திருந்த காட்டுப்பகுதி தெரிய வந்துள்ளதாகஅதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இச் சிறுவன் தந்த தகவலின்படி தின்னஹள்ளி என்ற இடத்தைச் சுற்றிலும் 60 சதுர கிலோமீட்டர்தொலைவுக்குள்தான் வீரப்பன் பதுங்கியிருப்பதாக அதிரடிப்படைக்குத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கர்நாடக அதிரடிப்படையினரும் மத்திய சிறப்பு கமாண்டோ படையினரும் இந்தப் பகுதியைமுற்றுகையிட வீரப்பன் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் நாகப்பா விடுவிக்கப்பட்டதாகவும் புரளி பரவியது.
சிறுவன் தந்த தகவலின்படி தின்னஹள்ளி, சிக்கிரிகுண்டா ஆகிய பகுதிகளில் நேற்று முதல் வீரப்பனைத் தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தின்னஹள்ளியில் ஓரிடத்தில் அதிரடிப்படை சென்றபோது வீரப்பன் கும்பல் சிறிது நேரத்துக்கு முன் தான்அங்கிருந்து இடத்தைக் காலி செய்துள்ளது தெரியவந்தது. அங்கு சமைத்து சாப்பிட்டதற்கான தடயங்கள் இருந்தன.
தொடர்ந்து ஹெலிகாப்டர்களையும் கொண்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே, கர்நாடக அதிரடிப் படைக்கு தமிழக அதிரடிப்படையினர் முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருவதாகதமிழக டிஜிபி நெயில்வால் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பன் வேட்டையில் தொய்வு இல்லை. இரு மாநிலஅதிரடிப்படையினரும் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
கர்நாடகத்துக்கு இந்த விஷயத்தில் தமிழகம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறுவது தவறு என்றார்.












Click it and Unblock the Notifications