அதிமுகவில் இணைந்த 7 சென்னை கவுன்சிலர்கள்: காங்., திமுக அதிர்ச்சி
சென்னை:
தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த வெற்றிவேல் உள்ளிட்ட 5 கவுன்சிலர்களும் 2 பெண் திமுக கவுன்சிலர்களும் இன்றுமுதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியுடன், தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்தது. இதையடுத்து தமாகா தரப்பில் பிளவுகள்வெடிக்கத் தொடங்கின.
பாண்டிச்சேரியில்இருந்த ஒரே எம்.எல்.ஏவும் தனித்து செயல்படப் போவதாக அறிவித்து விட்டார். தமிழகத்தில் 5தமாகா எம்.எல்.ஏக்கள் தாங்கள் இன்னும் தமாகாவிலேயே நீடிப்பதாகக் கூறி விட்டனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியிலும் விரைவில் பிளவு வெடிக்கும் என்று முன்பே தட்ஸ்தமிழ்.காமில் நாம்கூறியிருந்தோம். அதுபோலவே இப்போது பிளவு ஏற்பட்டு விட்டது.
தமாகாவின் மாநகராட்சித் தலைவராக இருந்த வெற்றிவேல் தலைமையில் ஐந்து தமாகா கவுன்சிலர்களும், வசந்திமற்றும் விஜயலட்சுமி ஆகிய இரண்டு திமுக கவுன்சிலர்களும் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
இன்று காலை போயஸ் தோட்டத்திற்குச் சென்ற இந்த ஏழு பேரையும் ஜெயலலிதா அன்புடன் வரவேற்றார். பின்னர்அவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் முன்னிலையிலேயே அதிமுகவில் இணைந்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மேயர் ஸ்டாலின் ஆகியோர் மீது மேம்பால ஊழல் வழக்குப் போடமுக்கியக் காரணமே வெற்றிவேல் தான். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் இப்போது வழக்கே நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மூப்பனாரின் தீவிர தொண்டராக இருந்த வெற்றிவேல் கே.கே. நகர் பகுதியிலிருந்து கவுன்சிலராகத் தேர்வுசெய்யப்பட்டார். மாநிகராட்சி கவுன்சிலராக மாறிய பின் இவரும், துணை மேயர் கராத்தே தியாகராஜனும்இணைந்தே செயல்பட்டனர். இணை பிரியா நண்பர்களாகவும் மாறினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஜெயலலிதா கடுமையாக விமர்சித்ததால், வெற்றிவேல் அதை கண்டித்துசெயல்படுவார் என்று காங்கிரஸ் தரப்பு எதிர்பார்த்தது. ஆனால் தனக்கு உரிய பதவி கொடுக்காத கடுப்பில் இருந்தவெற்றிவேல் இப்போது அதிமுகவில் சேர்ந்து காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டார்.
இதற்கிடையே தங்கள் கட்சியிலிருந்து இரண்டு பெண் கவுன்சிலர்கள் விலகி அதிமுகவில் இணைந்து விட்டனர்என்பதை அறிந்து திமுக தலைமையும் அதிர்ந்து போயுள்ளது.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications