கர்நாடக அரசை தூக்கி எறிய வேண்டும்: கிருஷ்ணசாமி
கோயம்புத்தூர்:
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்த கர்நாடக அரசைக் கலைத்து அங்குஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமிகூறினார்.
இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி இன்று கோயம்புத்தூரில் நிருபர்களிடம் கூறுகையில்,
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு மாநிலம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அப்போதே அந்த மாநில அரசுசெயல்படத் தகுதியற்றதாகி விட்டது என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்றஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள கர்நாடக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மட்டுமல்லாது காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுக்கும் கர்நாடக அரசு செவிசாய்க்கவில்லை.
எனவே கர்நாடக அரசை கலைப்பதோடு நில்லாமல் அங்கு ஜனாதிபதி ஆட்சியையும் அமல்படுத்த வேண்டும்.
மேலும் காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 40 தமிழக எம்.பிக்களும் உடனடியாகத்தங்கள் பதவியை ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான்காவிரி பிரச்சனைக்கு ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும்.
தமிழக அரசு முடிந்தால் இப்பிரச்சனை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தைக் கூட அணுகலாம். இது போன்றவழிகளையெல்லாம் விட்டுவிட்டு தமிழகத்தில் உள்ள எதிர்க் கட்சிகளை வசைபாடுவதை தமிழக முதல்வர்ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு எதிர்க் கட்சிகளைத் தாக்குவதையும் தன்னிச்சையாகச் செயல்படுவதையும் நிறுத்திவிட்டு உடனடியாகஅனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்து அனைத்துப் பள்ளிப்பாடத்திட்டத்திலும் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கிருஷ்ணசாமிகோரிக்கை விடுத்தார்.
-->












Click it and Unblock the Notifications