ஜெயலலிதாவுக்கு "ஈகோ" நோய்: இளங்கோவன் கடும் தாக்கு
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை "ஈகோ" என்னும் நோய் பிடித்து ஆட்டிவைத்துக் கொண்டிருப்பதால் தான் அவர்காவிரிப் பிரச்சினை தொடர்பாக எதிர்க் கட்சிகளுடன் ஒரு முறை கூட ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாகசெயல்பட்டுக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று இளங்கோவன் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகத்தில் காவிரிப் பிரச்சினை தொடர்பாக அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முதல்வர் கிருஷ்ணா15க்கும் மேற்பட்ட முறை ஆலோசனைகள் நடத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் கூட பிரதமர் வாஜ்பாயை வீடு தேடிச் சென்று ஆலோசனைநடத்தி வந்துள்ளனர்.
ஆனால் தமிழகத்திலோ ஒரு முறை கூட எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனையை ஜெயலலிதா பெறவில்லை.அதற்காக முயற்சிக்கவும் இல்லை. மாறாக, எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படிப் பழி வாங்குவது என்பது குறித்துதான் எப்போதும் சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
காவிரிப் பிரச்சினை தீருவதில் ஜெயலலிதாவுக்கு சிறிதும் அக்கறை இல்லை. அதை வைத்துக் கொண்டுஎதிர்க்கட்சியினரை விமர்சிப்பதே அவரது லட்சியமாக உள்ளது. எனவே ஜெயலலிதா தமிழக முதல்வராகஇருப்பதற்கே அருகதையற்றவர்.
கடந்த ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தன்னுடைய முதல்வர் பதவிபறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உதவியை நாடினார்.
அதே போல் இப்போதும் காவிரி விஷயத்தில் சோனியாவை நாட வேண்டியது தானே? இது தொடர்பாக ஒருமுறையாவது சோனியாவைச் சந்தித்து ஜெயலலிதா பேசியிருப்பாரா?
ஜெயலலிதாவை "ஈகோ" என்னும் நோய் பிடித்துக் கொண்டு ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனாலேயேஅவர் எப்போதும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம்புகட்டுவார்கள் என்று அவ்வறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications