மதுரையில் சாலைகளுக்காக "கொல்லப்படும்" மரங்கள்!!
மதுரை:
மதுரை மாநகரில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான மரங்கள்வெட்டப்பட்டு வருகின்றன.
மதுரையில் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டமாக புறநகர்ப்பகுதிகள் மற்றும் பக்கத்து ஊர்களிலிருந்து மதுரைக்கு நேரடியாக சாலைகள் போடப்பட்டு வருகின்றன.
அவனியாபுரம், ஆணையூர், அழகர்கோவில், மேலக்கால் மற்றும் நத்தம் ஆகிய இடங்களிலிருந்து மதுரை நகருக்குபக்காவான சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இந்த சாலை அமைக்கும் பணிகளுக்காக சாலையோரம் உள்ள,மிகவும் வயதான, நீண்ட காலமாக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பலனளித்து வந்த ஆயிரக்கணக்கான மரங்கள்வெட்டப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். மரங்களை வெட்டாமலேயேசாலைகள் அமைக்குமாறு நெடுஞ்சாலைத் துறைக்கும், பொதுப்பணித்துறைக்கும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட "கிரீன் பெல்ட்" திட்டம் வெற்றிகரமாகஅமல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மரக் கன்றுகள்மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் நடப்பட்டன.
அவற்றில் 80 சதவீத மரக் கன்றுகள், நன்கு துளிர்த்து வளரத் தொடங்கியுள்ளன. இன்னும் இரண்டு அல்லதுமூன்றுஆண்டுகளில் மதுரை நகரில் பச்சை கம்பளம் விரித்தது போல, எங்கு பார்த்தாலும் மரங்களாக காணப்படும்என்று மாவட்ட வன அதிகாரி பாரதி தெரிவித்துள்ளார்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications