ஐ.நா. சபையில் இன்று பேசுகிறார் வாஜ்பாய்
நியூயார்க்:
பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக, முக்கியமாக பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராகஐ.நா. சபையில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. சபையில் நேற்று பேசிய பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் இந்தியாவைக்கடுமையாகத் தாக்கிப் பேசினார். காஷ்மீர் பிரச்சனையை மட்டுமல்லாமல் குஜராத் பிரச்சனையையும் அவர் கையில்எடுத்துக் கொண்டு பேசினார்.
இந்தியாவில் இந்துத்துவம் என்கிற பெயரில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானசிறுபான்மையினர் கொல்லப்பட்டு வருகின்றனர் என்றும் முஷாரப் குற்றம் சாட்டினார்.
இந்துத்துவ தீவிரவாதிகள் தான் இந்தியாவில் வன்முறையைக் கட்டவிழ்த்து வருகின்றனர் என்றும் ஆனால் பழியைபாகிஸ்தான் மீது இந்தியா சுமத்தி வருகிறது என்றும் முஷாரப் ஐ.நா. சபையில் பேசினார்.
முஷாரப்பின் இந்தக் குற்றச்சாட்டுக்களை இந்தியா கடுமையாக மறுத்துள்ளது. முஷாரப்பின் பேச்சு வெறும்"பப்ளிசிட்டி ஸ்டண்ட்" தான் என்றும் உலக நாடுகளின் கவனத்தைக் கவரவே அவர் இவ்வாறு பேசியுள்ளார்என்றும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபல் நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறினார்.
முஷராப்பின் பேச்சு வெறும் "வெத்து வேட்டு" என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நிருபமாராவும் கூறியுள்ளார். முஷாரப்பின் பேச்சினால் காஷ்மீரில் பதுங்கியுள்ள பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள்சந்தோஷப்படுவார்கள். இதனால் அவர்கள் காஷ்மீரை மேலும் தீவிரமாகத் தாக்கலாம் என்ற பயம் தான் தற்போதுஎழுந்துள்ளது என்றும் ராவ் கூறினார்.
இதற்கிடையே முஷாரப்பின் பேச்சுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இன்று ஐ.நா. சபையில் வாஜ்பாய்பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாடுகள் (பாகிஸ்தான் உள்பட) தீவிரவாதிகளுக்கு உதவி அளிக்கும் வரை பயங்கரவாதத்தைத் தடுத்துநிறுத்தவே முடியாது என்று நேற்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை சந்தித்துப் பேசிய போது வாஜ்பாய்தெரிவித்தார்.
எனவே தீவிரவாதிகளுக்கு உதவுவதை அந்நாடுகள் நிறுத்திக் கொள்ள உலக நாடுகளை வற்புறுத்த வேண்டும்என்றும் அவரிடம் வாஜ்பாய் கேட்டுக் கொண்டார்.
பின்னர் பல்வேறு யூத மதகுருமார்களை சந்தித்துப் பேசிய போதும் வாஜ்பாய் இதை வலியுறுத்தினார். சுமார் ஒருமணி நேரம் அவர்களுடன் வாஜ்பாய் பேசிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே நேற்று முஷாரப்பை தனியாகச் சந்தித்துப் பேசிய புஷ், இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்ஊடுருவுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உலக வர்த்தக மையத்தில் வாஜ்பாய் அஞ்சலி:
முன்னதாக கடந்த 11ம் தேதி இரவு நியூயார்க்கில் இடிந்து தரைமட்டமான உலக வர்த்தக மையம் இருந்தஇடத்திற்குச் சென்ற வாஜ்பாய், அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
உலக வர்த்தக மையத்தின் கட்டடத்தில் சிக்கிக் கொண்டு உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினரையும் சந்தித்துஅவர்களுக்கு வாஜ்பாய் ஆறுதல் கூறினார்.
-->
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications