காவிரி விவகாரம்: சாலை மறியல் செய்த 10,000 இ.கம்யூ. தொண்டர்கள் கைது
சென்னை:
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்திற்குக் காவிரியில் தினமும் 1.25 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வலியுறுத்த மத்திய அரசு தவறி விட்டது என்று குற்றம் சாட்டியுள்ள இந்திய கம்யூனிஸ்ட்கட்சி இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்தது.
அதன்படி இன்று தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரியும் அவர்கள் இந்தப் போராட்டத்தைமேற்கொண்டனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் அமர்ந்து கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள்போராட்டம் நடத்தினர். மதுரையில் பல ரயில்களை மறிக்கவும் அவர்கள் முயற்சித்தனர்.
இதையடுத்து நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை, விருதுநகர், மன்னார்குடி, திருமங்கலம், மேலூர்,திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட்தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாநிலம் முழுவதும் சுமார் 10,000 தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரான நல்லக்கண்ணு ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் விவசாயிகள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவியை அரசுஉடனடியாக வழங்க வேண்டும் என்றும் தங்கள் போராட்டத்தின் போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தொண்டர்கள் வலியுறுத்தினர்.
தஞ்சையில் மாபெரும் பொதுக் கூட்டம்
முன்னதாக, காவிரியில் நீர் திறந்து விட கர்நாடகம் மறுப்பதைக் கண்டித்து தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பில்நேற்று இரவு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் பொன்னையன், தளவாய் சுந்தரம், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள்உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடகத்தைக் கண்டித்து இந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications