தமிழர்கள் தாக்கப்பட்டால் கன்னடர்களுக்கு பதிலடி கொடுக்க பா.ம.க. தயார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரிப் பிரச்சினையில் தீர்வு ஏற்படும் வரை கன்னடப் படங்களைத் திரையிடக் கூடாது என்று ஓசூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கர்நாடகத் தமிழர்கள் தாக்கப்பட்டால் ஓசூர் கன்னடர்களும் தாக்கப்படுவார்கள் என்றும் பாமகவினர் கூறிவருவதாகத் தெரிகிறது.

தமிழக, கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ள தொழில் நகரம் ஓசூர். இங்கு கன்னடர்களும், தெலுங்கர்களும்அதிக அளவில் உள்ளனர். இதன் காரணமாக இங்குள்ள தியேட்டர்களில் கன்னட மற்றும் தெலுங்குப் படங்களும்அதிக அளவில் திரையிடப்படுவது வழக்கம்.

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பும், வன்முறையும், தமிழர்களுக்கு எதிரானதுவேஷமும் அதிகரித்திருப்பதால் தமிழகத்தில் உள்ள கன்னடர்களுக்கு எதிரான அலை கிளம்பத்தொடங்கியுள்ளது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

இதுவரை கர்நாடகத்தில் தமிழர்கள் என்னதான் அவதிப்பட்டாலும், அடிபட்டாலும், மிதிபட்டாலும் தமிழகத்தில்உள்ள கன்னடர்களுக்கு ஒரு துரும்பு கூட பாதிப்பு ஏற்பட்டதில்லை. ஆனால் இப்போது நிலைமை சற்று மாறிப்போயுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி விஸ்வரூபம் எடுத்தபோது, அது கன்னடர்களுக்குஎதிராகவும் குரல் கொடுக்கத் தொடங்கியது. இப்போது ஓசூரில் அது எதிரொலித்துள்ளது.

காவிரிப் பிரச்சினையில் தீர்வு ஏற்படும் வரை கன்னடத் திரைப்படங்கள் திரையிடக் கூடாது. மீறினால் கடும்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஓசூர் மற்றும் சுற்றுப்பகுதியில் கன்னடப் படங்களைத் திரையிடும்தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் வன்னியர்கள் பெரும்பான்மையான அளவில் உள்ளதாலும், பாட்டாளி மக்கள் கட்சிக்குநல்ல செல்வாக்கு இருப்பதாலும் இந்த எச்சரிக்கையை தியேட்டர் உரிமையாளர்கள் புறக்கணிக்க முடியவில்லை.

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டால், பதிலுக்கு தமிழகத்தில் உள்ள கன்னடர்களுக்கு எதிராக பாட்டாளிமக்கள் கட்சியினர் தாக்குதலில் ஈடுபடலாம் என்று கருதப்படுவதால் ஓசூர் மற்றும் எல்லைப் பகுதி கிராமங்களில்இதுவரை இல்லாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத் தமிழர்களுக்கு அரண் போல பாட்டாளி மக்கள் கட்சியினரின் செயல்பாடுகள் இருப்பதால் ஓசூரில்வாழும் கன்னடர்கள் சற்றே பீதியுடன் காணப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+