நாளை காஷ்மீரில் முதற்கட்ட தேர்தல்
ஸ்ரீநகர்:
பெரும் பதட்டத்திற்கும் பரபரப்புக்கும் இடையே நாளை காஷ்மீரில் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல்நடைபெறவுள்ளது.
காஷ்மீரில் நாளை (திங்கள்கிழமை) காலை 7 மணி முதல் 4 மணி வரை முதற்கட்டத் தேர்தல் நடக்கிறது. இதற்கானஅனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரலாறு காணாத அளவுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் இன்று நிருபர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் கமிஷனர் லிங்டோ, காஷ்மீர் மக்கள் அனைவரும்தைரியமாக வந்து ஓட்டுப் போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
காஷ்மீர் தேர்தலை தற்போது உலகமே மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வரும் நிலையில், தேர்தலைத் தடுத்துநிறுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இதன் விளைவாக கடந்த வாரம் காஷ்மீர் மாநில அமைச்சர் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டனர்.இன்றும் கூட மற்றொரு அமைச்சரைக் கொல்ல தீவிரவாதிகள் முயற்சித்தனர். ஆனால் அவர் மயிரிழையில்தப்பிவிட்டார்.
இந்தச் சம்பவங்களால் காஷ்மீர் மக்கள் மட்டுமல்லாது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட கடும்அச்சத்தில் உள்ளனர்.
ஐ.நாவில் எதிரொலித்த காஷ்மீர் தேர்தல்:
இதற்கிடையே ஐக்கிய நாடுகள் சபையிலும் காஷ்மீர் தேர்தல் எதிரொலித்தது.
சமீபத்தில் ஐ.நா. சபையில் பேசிய பிரதமர் வாஜ்பாய், காஷ்மீரில் தேர்தலைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில்பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயிடம் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
முன்னதாக பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்பும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகசராமாரியாக இந்தியாவைத் தாக்கிப் பேசினார். காஷ்மீரில் இந்துத்துவ தீவிரவாதிகள் தான் பயங்கரவாதத்தைத்தூண்டி வருவதாகவும் சிறுபான்மை முஸ்லீம்களை இந்துத்துவ தீவிரவாதிகள் கொன்று குவித்து வருவதாகவும்அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கு வாஜ்பாயும் தன்னுடைய ஐ.நா. உரையின் போது தக்க பதிலடி வழங்கினார். நியூயார்க்கிலிருந்து இன்றுதிரும்புவதற்கு முன்னரும் கூட முஷாரப்பைக் கடுமையாகத் தாக்கியுள்ளார் வாஜ்பாய். காஷ்மீர் தேர்தல் விஷயத்தில்முஷாரப் வரம்பு மீறிப் பேசி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
காஷ்மீர் தேர்தலை சர்வதேசப் பார்வையாளர்களும் கண்காணிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications