அட, பேச்சை குறைங்கப்பா... வீரமணி அறிவுரை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் அரசுடன் ஒத்துழைக்காவிட்டாலும், ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கை விடுவதைஎதிர்க்கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சினையில் அரசு மேற்கொண்டுள்ள நிலைக்குஒத்துழைப்பு கொடுத்து, ஒற்றுமையுடன் செயல்பட எதிர்க் கட்சிகள் முன் வர வேண்டும்.
அவ்வாறு செயல்பட முடியாத பட்சத்தில், அரசுக்கு எதிராக அறிக்கை விடுவதால் அது காவிரிப் பாசனவிவசாயிகளுக்குத்தான் பாதிப்பாக அமையும்.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றுகூறியுள்ளார் கி.வீ.
-->












Click it and Unblock the Notifications