காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டிய வாலிபர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தன்னைக் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி வாலிபர்,பின்னர் பயந்துபோய் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். தூத்துக்குடியில் இந்த சம்பவங்கள்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கீதா. இவர் ஒரு கல்லூரி மாணவி. இவரை கணேசன் என்பவர் ஒருதலையாக காதலித்துவந்தார். பலமுறை தனது காதலை கீதாவிடம் அவர் கூறியும், கீதா அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணேசன், நேற்று கீதா கல்லூரிக்குப் போகும்போது அவரை வழிமறித்துத் தன்னைஏற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார். கீதா மறுக்கவே, கையோடு கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து கீதாவின்தலை மற்றும் கழுத்தில் பலமாக வெட்டினார்.
இதனால் நிலைகுலைந்த கீதா ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துகீதாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கீதாவை வெட்டிய கணேசன் அவர் ரத்த வெள்ளத்தில் துடிப்பதைப் பார்த்து பயந்து போய் அங்கிருந்து ஓடினார்.தனது வீட்டிற்கு சென்ற அவர் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்ளமுயற்சித்தார்.
ஆனால் பின்னாலேயே துரத்தி வந்த பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்தில்ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications