பட்டதாரி ஆசிரியர்களும் இனி "அட்டஸ்டேஷன்" போடலாம்!
சென்னை:
சான்றொப்பம் எனப்படும் "அட்டஸ்டேஷன்" வாங்குவதற்காக இனி அரசு அதிகாரிகளிடம் அலையவேண்டியதில்லை. யாராவது ஒரு பட்டதாரி ஆசிரியர் அல்லது தமிழ் ஆசிரியரிடம் வாங்கினாலே போதும்.
உயர் கல்விக்கு விண்ணப்பிக்கும்போதும், மத்திய, மாநில அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போதும்தாசில்தார் மட்டத்திலான அதிகாரி அல்லது டாக்டர்கள், அரசு இன்ஜினியர்கள், அரசு வழக்கறிஞர்கள், தலைமைஆசிரியர்கள் ஆகியோரில் ஒருவரிடம் நமது மதிப்பெண் பட்டியல் மற்றும் கல்விச் சான்றிதழ்களில் கையெழுத்துவாங்கி அனுப்ப வேண்டும்.
இதில் கையெழுத்துப் போட பல அதிகாரிகளும் ரூ. 50 கேட்டு தொல்லைப்படுத்தி வருகின்றனர். குறிப்பாகதாசில்தார்கள், டாக்டர்களிடம் போய் சான்றிதழ்களை நீட்டினால் காசை வாங்காமல் கையெழுத்துப்போடுவதில்லை.
வீட்டில் உள்ள நிதி சிரமங்களையும் மீறி உயர் படிப்புக்கு விண்ணப்பிக்கச் செல்லும் மாணவ, மாணவிகளை இந்தஅட்டஸ்டேசன் லஞ்சம் வெகுவாக பாதித்து வந்தது.
இந் நிலையில் பட்டதாரி ஆசிரியர்களும், தமிழ் ஆசிரியர்களும் இனிமேல் சான்றொப்ப கையெழுத்து இடலாம்என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஊராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரிஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் சான்றொப்பம் இடும் அதிகாரம் வழங்கப்படுவதாக அரசுசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சுப்ரமணியன் நன்றிதெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கும், கல்வியமைச்சர் தம்பிதுரைக்கு இந்த நல்ல யோசனையை எடுத்துச் சொன்ன அதிகாரிகளுக்கும் அதை ஏற்றஅரசுக்கும் மாணவர்கள் சார்பில் நன்றி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications