வள்ளலாரை அவமானப்படுத்தும் தமிழக அரசுதட்ஸ்தமிழ் சிறப்புக் கட்டுரை
கடலூர்:
கடந்த 135 ஆண்டுகளாக எரிகிற அடுப்பை அணைய விடாமல் தொடர்ந்து உணவு சமைத்து பசியுடன் வருபவர்க்கு எல்லாம் உணவு தந்து வரும் வள்ளலார் திருச்சபையின் அன்னதானத் திட்டத்தை தமிழக அரசு தனது திட்டமாக பெயர் மாற்றி வள்ளலாரைக் கேவலப்படுத்தியுள்ளது.
உலக உயிர்களில் எல்லாம் இறைவனைக் கண்டவர் ராமலிங்க அடிகளார் என்ற வள்ளலார் பெருமான். 1867ம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ளவடலூரில் சத்திய தர்ம சன்மார்க்க சபையை அமைத்து பசி என்று வந்தவர்க்கு எல்லாம் உணவு சமைத்துத் தந்தார்.
உலகில் முதன்முதலில் ஏழைகளின் பசி போக்க அன்னதானம் என்ற திட்டத்தையே தொடங்கியவர் அவர் தான்.
135 ஆண்டுகளுக்கு முன் அவர் ஏற்றிய தர்ம சாலையின் அடுப்பு இதுவரை அணைக்கப்பட்டதே இல்லை.
இங்கு தொடர்ந்து உணவு சமைக்கப்பட்டு தினமும் மூன்று வேளையும் ஆயிரக்கணக்கான பசி நிரம்பிய வயிறுகளின் துன்பம் போக்கப்பட்டு வருகிறது.
இதற்காக இந்தச் சபை யாரிடமும் நன்கொடை ரசீதை நீட்டியதாக வரலாறே கிடையாது. பக்தர்களே முன் வந்து கொடுத்த பணம் ரூ. 2.25 கோடி வங்கியில்இருப்பு வைக்கப்பட்டும், பக்தர்கள் தரும் நெல், அரிசி, கேழ்வரகு போன்ற தானியங்களைக் கொண்டும் இந்த அன்ன தானத் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சமீபத்தில் திருக் கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கினார் முதல்வர் ஜெயலலிதா. இதை பல்வேறு கோவில்களிலும்படிப்படியாக அறிமுகப்படுத்தி வரும் அரசு சமீபத்தில் வள்ளலாரின் சமய சன்மார்க்க்க ஆலயத்திலும் இத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவெனில் வள்ளலாரின் ஆலயத்தில் 135 ஆண்டுகளாய் நடந்து வரும் அன்னதானத் திட்டத்தை தமிழக அரசின்திருக்கோவில் அன்னதானத் திட்டம் என்று பெயர் மாற்றி டுபாக்கூர் வேலை செய்துள்ளது தமிழக அரசு.
உலகில் முதன்முதலில் அன்ன தானத்தைத் தொடங்கிய மகானின் ஆலயத்தில் நடந்து வரும் ஒரு திட்டத்தை அரசு தனது திட்டமாக பெயர்மாற்றம் செய்துள்ளது வள்ளலாரின் பக்தர்களை மனம் நோகச் செய்துள்ளது.
இது குறித்து இந்த ஆலய நிர்வாகிகளில் ஒருவர் கூறுகையில், தமிழக அரசின் இந்தச் செயல் கொல்லன் பட்டறையில் ஊசி விற்பதுபோன்றது. தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் உணவு தந்து வரும் வள்ளலாரின் ஆலயத்திலேயே அன்னதானத் திட்டம் என்பதுநகைப்புக்குரியது. மேலும் ஆலயத்தில் நூற்றாண்டுகளாய் நடந்து வரும் ஒரு திட்டத்தை தனது திட்டம் மாதிரி மாற்றிக் காட்டி மக்களைஏமாற்ற அரசு முயல்வது பெரும் வருத்தம் தருகிறது என்றார்.
(இந்த நிர்வாகியின் பெயரைக் குறிப்பிட்டால் அவரது வீட்டுக்கு உருட்டைக் கட்டைகளுடன் ரத்தத்தின் ரத்தங்கள் வர வாய்ப்புள்ளதால்தவிர்த்திருக்கிறோம்)
இதன் மூலம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்றுரைத்து வாடிய உயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார்பெருமானின் பெருமையை தமிழக அரசு குலைத்துள்ளது.
அந்தத் தமிழ்ப் பெருமகனின் வரலாறு தெரிந்த யாரும் இந்தச் செயலை செய்யத் துணிய மாட்டார்கள்.
தமிழக அரசுக்கு யாராவது வரலாறு சொல்லித் தந்தால் நல்லது.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications