மதுரையில் ரூ.50,000 லஞ்சம் கேட்ட தாசில்தார் அதிரடி கைது
மதுரை:
மதுரையில் நலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ரூ.50,000 லஞ்சம் கேட்ட தாசில்தார் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
மதுரை ஆணையூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவருக்கும் இன்னொருவருக்கும், நிலப் பிரச்சினை இருந்துவந்தது. தேவராஜனின் நிலத்தை அந்த நபர் தனது நிலம் என்று கூறி வந்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகத்தை அணுகிய தேவராஜன் இந்தப் பிரச்சினை தொடர்பாகதாசில்தார் பழனியப்பனிடம் முறையிட்டார்.
அதற்கு பழனியப்பன், ரூ.50,000 கொடுத்தால் உங்களுடைய பெயரிலேயே அந்த நிலத்துக்கு பட்டா எழுதித்தருகிறேன் என்று தேவராஜனிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன தேவராஜன் லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
பின்னர் போலீஸார் அறிவுரைப்படி பழனியப்பனைப் பார்க்கப் போனார் தேவராஜன். போலீஸார் கூறியபடி,எண்கள் குறிப்பிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை பழனியப்பனிடம் தேவராஜன் கொடுத்தார்.
அதை பழனியப்பன் சந்தோஷமாக வாங்கிக் கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த போலீஸார் கையும்களவுமாக அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
அவரோடு, கோட்டாட்சியரின் உதவியாளர் பால்ராஜ் மற்றும் ஸ்டாலின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications