கபினி அணையில் குதித்து விவசாயி சாவு: முழு போதையில் இருந்தார்
பெங்களூர்:
கபினி அணையில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதை எதிர்த்து அணையில் குதித்து போராட்டம் நடத்திய5 பேரில் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். அவர் போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மற்றநால்வரும் பிறர் உதவியுடன் நீந்தி கரை சேர்ந்துவிட்டனர்.
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிடப்படுவதை எதிர்த்து மாண்டியா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து பெரும்போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கபினி அணையில் குதித்து போராட்டம் நடத்துவோம் என்றும்அவர்கள் மிரட்டியிருந்தனர்.
இந்நிலையில் சுமார் 600 விவசாயிகள் நேற்று கபிலா ஆற்றுப் பாலப் பகுதியில் சென்று போராட்டம் நடத்தினர்.தமிழகத்திற்கு நீர் திறந்து விடக் கூடாது என்று கோஷம் எழுப்பியவாறே அவர்கள் கபினி அணை வளாகத்தைநோக்கி முன்னேறினர்.
ஆனால் அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பெரும் "தள்ளுமுள்ளு" ஏற்பட்டது.
இந்நிலையில் ஒரு பெண் விவசாயி திடீரென்று கூட்டத்திலிருந்து வெளியேறி அணையில் குதிக்க முயன்றார்.ஆனால் போலீசார் உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பெண்ணைத் தடுத்தனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள்மீது தடியடியும் நடத்தினர் போலீசார்.
அப்போது ஐந்து விவசாயிகள் கபினி அணையின் பக்கம் சென்றனர். நீரில் குதித்து போராட்டம்நடத்தப்போவதாகக் கூறியவாரே அவர்கள் திடீரென்று அணையில் குதித்தனர்.
முக்கிய மதகு வழியாக தண்ணீர் சீறிப் பாய்ந்து வந்து கொண்டிருந்த பகுதியில் அவர்கள் குதித்ததால் வெள்ளத்தில்சிக்கினர். தங்களைக் காப்பாற்றுமாறு அந்த 5 பேரும் குரல் எழுப்பினர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசாரும் சில விவசாயிகளும் அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தசிலரும் கால்வாயில் குதித்து 4 விவசாயிகளை மீட்டனர். அவர்கள் உதவியுடன் அந்த 4 விவசாயிகளும் நீந்திக் கரைசேர்ந்தனர்.
ஆனால், குருசாமி என்ற விவசாயி மட்டும் நீரில் மூழ்கிவிட்டார்.
50 வயதான குருசாமி நீரில் குதிப்பதற்கு முன் தன்னிடம் இருந்த ரூ. 1,000 எடுத்து இன்னொருவரிடம்தந்துவிட்டுக் குதித்துள்ளார். அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது குருசாமி முழு போதையில்இருந்தவண்ணம் நீரில் குதித்தது தெரியவந்தது.
நேற்று நள்ளிரவு அணையிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் தள்ளி உள்ள அகத்தூர் கிராமத்தில் காவிரிஆற்றின் ஓரத்தில் அவருடைய உடல் மீட்கப்பட்டது.
மைசூரில் நடிகர் ராஜ்குமார் ரசிகர்களும் சமூக விரோதிகளும் அரசு அலுவலங்களில் புகுந்து அவற்றைவலுக்கட்டாயமாக பூட்டச் செய்தனர். பள்ளிகளையும் மூடச் சொல்லி நிர்பந்தம் செய்து மூட வைத்தனர்.ஆங்காங்கே சாலை மறியலிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பதற்றத்தையே சாக்காக வைத்து கபினி அணையை கர்நாடகம் மூடிவிட்டது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர்கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
மாண்டியா எம்.பியும் நடிகருமான அம்பரீஷ் (ரஜினியின் பல தமிழ் படங்களிலும் தலைகாட்டி பணம் பார்த்தவர்)தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதைத் தடுக்க தனது பதவியையே ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாக இன்றுவிவசாயிகள் மத்தியில் வசனம் பேசினார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications