தினசரி ரூ.11 கோடி வட்டி கட்டுகிறோம்: பொன்னையன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் நிலவும் கடும் நிதி நெருக்கடியை சமாளிக்க வெளிச் சந்தையில் நிதி திரட்டுவதற்கு மத்திய அரசின்அனுமதியை மாநில அரசு கோரியுள்ளது.
சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பொன்னையன் பேசுகையில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.அவர் கூறுகையில்,
தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி நிலவுகிறது. இதை சமாளிக்க வெளிச்சந்தையிலிருந்து நிதி திரட்டிக் கொள்ளஅனுமதிக்குமாறு கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
விரைவில் இதற்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த நிதியை சிறு மற்றும் குறுந் தொழில்நிறுவனங்களுக்கு செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழரசு அரசு வாங்கிய கடனுக்காக தினசரி வட்டி மட்டும் ரூ.11 கோடி கட்டப்பட்டு வருகிறது என்றார்பொன்னையன்.
-->












Click it and Unblock the Notifications