தமிழகத்துக்கு தண்ணீர் நிறுத்தம்
பெங்களூர்:
கபினி அணையில் கர்நாடக விவசாயி ஒருவர் போதையில் விழுந்து இறந்ததைத் தொடர்ந்து அந்த அணைமூடப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்துக்கு தினமும் தண்ணீர் விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடகம் குப்பையில் தூக்கிப்போட்டுள்ளது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காத கர்நாடகம்காவிரியில் அவ்வப்போது தான் நீரைத் திறந்து விட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று கபினி அணையில் போதையில் இருந்த ஒரு கர்நாடக விவசாயி விழுந்து இறந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் கபினி அணை மூடப்பட்டது. அதிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர்திறந்துவிடப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் நேற்று தான் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு முதன்முதலாகவந்து சேர ஆரம்பித்தது.
இந்நிலையில் மீண்டும் கபினி அணையிலிருந்து நீர் வருவது நின்று போய்விட்டது.
இது குறித்து கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் கூறுகையில், விவசாயி குருசாமியின் தற்கொலையைத்தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் விடுவது நேற்று இரவு முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. விவசாயிகள் தற்கொலைஅளவுக்குச் சென்றுள்ளதால் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க உடனடியாக மீண்டும் நதி நீர் ஆணையத்தைக்கூட்டி விவாதிக்க வேண்டும் எனறார்.
போராட்டக்காரர்களை ஒடுக்கி தமிழகத்துக்கு நியாயமாகத் தண்ணீர் விட வழி செய்வதை விட்டுவிட்டு இதை ஒருகாரணமாக வைத்து தண்ணீர் தருவதை கர்நாடகம் நிறுத்தியுள்ளது.
மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு
இதற்கிடையே கபினி அணை மூடப்பட்டதைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறையத்தொடங்கியுள்ளது.
கர்நாடகம் திறந்து விட்ட காவிரி நீர் நேற்று தான் மேட்டூரை அடையத் தொடங்கியது. தினசரி 9,000 கன அடிஎன்ற அளவிற்குத் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடகம் அறிவித்திருந்தது. அதே நேரத்தில் காவிரி டெல்டாபகுதியில் லேசான மழை பெய்ததாலும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் கபினி அணையில் கர்நாடக விவசாயி ஒருவர் போதையில் விழுந்து இறந்ததைத் தொடர்ந்து அந்தஅணையிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு நிறுத்தி விட்டது. இதனால் அணைக்குவரும் தண்ணீரின் அளவு குறையத் தொடங்கியுள்ளது.
தற்போது மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 12,179 கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து விநாடிக்கு 12,072கனஅடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 52.32 அடியாக உள்ளது என்று தமிழகபொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications