பாதாள சாக்கடைக்குள் விழுந்து மீட்பு உயிருக்குப் போராடும் 3 வயதுக் குழந்தை
சென்னை:
மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால், சாலையோரம் மூடப்படாமல் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள்விழுந்து மீட்கப்பட்ட3 வயதுக் குழந்தை உயிருக்காகப் போராடி வருகிறது.
சென்னை சாலிகிராமம் காந்தி நகர் பகுதியில் விநாயகர் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவைச் சேர்ந்தவர்ரமேஷ். இவரது குழந்தை தக்ஷின பிரியா (3).
இந்தத் தெருவின் முனையில் மாநகராட்சி பம்பிங் நிலையம் உள்ளது. இந்த இடத்தில் உள்ள பாதாள சாக்கடையில்சமீபத்தில் அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாக்கடை மூடியைத் திறந்து மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்தனர்.பின்னர் மூடியை மூடாமல் அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை தக்ஷினபிரியா மற்றும் சில சிறுமிகள் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது தக்ஷின பிரியா தடுமாறி திறந்து கிடந்த பாதாளச் சாக்கடைக்குள் விழுந்து விட்டாள்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் சாக்கடைக்குள் இறங்கி தேடிப் பார்த்தனர். ஆனால் தக்ஷினப் பிரியாகிடைக்கவில்லை.
இந்நிலையில் சாக்கடை முடியும் இடமான கூவம் ஆற்றில் அரை மணி நேரம் கழித்து அந்தக் குழந்தை விழுந்தது.இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தக்ஷினப் பிரியாவை தூக்கிக் கொண்டு அவளது வீட்டுக்கு ஓடி வந்தனர்.அவளுடைய பெற்றோர் உடனடியாக அவளை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குழந்தை இன்னும் கண் திறந்துபார்க்கவில்லை. உயிருக்குப் போராடி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications