திமுக புறக்கணித்தது: காங்கிரஸ் வெளிநடப்பு
சென்னை:
காவிரிப் பிரச்சனை குறித்து விவாதிக்க முதல்வர் ஜெயலலிதா இன்று கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுகபுறக்கணித்தது. ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புசெய்துவிட்டது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்விவசாயிகளுக்காக போராடி வரும் கட்சி திமுக.
முதலில் இருந்தே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இந்த விவகாரத்தில் முடிவு செய்திருக்க வேண்டும்.அதைவிட்டுவிட்டு எதிர்க் கட்சிகளை தரக் குறைவாகப் பேசியும் அலட்சியப்படுத்தியும் வந்தார் முதல்வர்ஜெயலலிதா.
அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெறாமல் தனது பலத்தை மட்டுமே நம்பி தன்னிச்சையாக பலநடவடிக்கைகளை எடுத்து அதில் தோல்வி அடைந்துவிட்ட ஜெயலலிதா இன்று திடீர் என்று அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
அதுவும் நாளை கூட்டம் நடக்கும் என்று நேற்று அறிவிக்கிறார். அவர் கூப்பிட்டவுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளநாங்கள் ஒன்றும் ஜெயலலிதாவின் அடிமைகள் அல்ல.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி ஆணையத்தைப் புறக்கணித்துவிட்டு பின்னர் தமிழகத்துக்கு வாஜ்பாய்துரோகம் செய்துவிட்டதாக உண்மைக்குப் புறம்பாகப் பேசினார் ஜெயலலிதா.
இவ்வாறு தொடர்ந்து அனைவரையும் குறை சொல்லி தமிழகத்தின் நலனைக் கெடுத்தார். ஜெயலலிதாவின்பேச்சினால் காவிரி விவகாரம் குரங்குப் புண் மாதிரி ஆகிவிட்டது. இதனால் அவர் தலைமையில் நடக்கும்கூட்டத்தில் திமுக பங்கேற்காது.
அதே நேரத்தில் தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க உடனே காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்என்று பிரதமர் வாஜ்பாயைக் கேட்டுக் கொள்கிறேன்.
சட்டத்தை மதித்து தமிழகத்துக்கு கர்நாடகம் நீரைத் திறந்துவிட வேண்டும்.
இரு மாநில உறவுகளுக்கும் பிரச்சனை ஏற்படாத வகையில் இந்த விவகாரத்தில் வாஜ்பாய் தலையிட்டுதமிழகத்துக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் ஆரம்பத்தில் இருந்தே அனைத்துக் கட்சிகளையும் கூட்டிப் பேசித் தான் முதல்வர் கிருஷ்ணாநடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் அம் மாநிலத்தின் குரல் ஒற்றுமையாகவும் வலுமையாகவும் ஒலிக்கிறது.
ஆனால், தமிழகத்தில் இதுவரை எதிர்க் கட்சிகளை புறக்கணித்திருந்தாலும் இப்போது தான் தமிழக அரசு தனதுதவறைத் திருத்திக் கொண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
இந் நிலையில் இக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கருணாநிதி அறிவித்திருப்பது அதிர்ச்சி தருகிறது.
காங்கிரஸ் வெளிநடப்பு:
இதற்கிடையே காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய பிரதமர் வாஜ்பாயிடம்வலியுறுத்தப்படும் என்ற தீர்மானத்தை எதிர்த்து இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து தமிழக காங்கிரஸ்கட்சி வெளிநடப்பு செய்தது.
காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை முதல்வர்ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் மற்றும் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையம் ஆகியவற்றின் உத்தரவுகளுக்கு அடிபணிய மறுத்து வரும் கிருஷ்ணாதலைமையிலான கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற இந்தத் தீர்மானத்தைக் கடுமையாகஎதிர்த்த காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவனும் பாலசுப்பிரமணியமும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்துவெளிநடப்பு செய்தனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications