வீரப்பனிடம் தூது செல்ல கல்யாணி, சுகுமாறன் நிபந்தனை
கடலூர்:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, தூதுவராக செல்ல கொடுக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் அங்கீகாரம்போன்றவற்றை தமிழக, கர்நாடக அரசுகள் இப்போதும் தந்தால் தான் நாகப்பாவை மீட்க காட்டுக்குள் தூதுபோவோம் என்று பேராசிரியர் கல்யாணி மற்றும் சுகுமாறன் ஆகியோர் தெரிவித்தனர்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை மீட்க தூது போகத் தயார் என்று இருவரும் அறிவித்திருந்தனர்.
ஆனால் சொந்த முயற்சியின் பேரில் தான் அவர்கள் இருவரும் வீரப்பனை சந்திக்க வேண்டும் என்றும்மேற்கொண்டு எந்த வகையிலும் கர்நாடக அரசு உதவாது என்றும் அம்மாநில முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாகூறியிருந்தார்.
இந்நிலையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனைகல்யாணியும் சுகுமாறனும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்று சந்தித்தனர்.
பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இரு மாநில அரசுகளும் எங்களை அரசுத் தூதர்களாக அறிவிக்க வேண்டும். நாங்கள் தான் தூதர்கள் என்றுஅதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவும் வேண்டும்.
மேலும் ராஜ்குமார் மீட்பின் போது தரப்பட்ட உத்தரவாதத்தைப் போல இப்போதும் இரு மாநில அரசுகளும்எங்களுக்கு உத்தரவாதம் தர வேண்டும். அப்போதுதான் நாங்கள் காட்டுக்குப் போக முடியும் என்று கூறினர்.
நெடுமாறனுடன் பேசிய விவரம் குறித்து நாளை விரிவான அறிக்கை வெளியிடுவோம் என்றும் கல்யாணியும்சுகுமாறனும் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications