ஜெயேந்திரர் பதவியேற்பு பொன்விழா: கலாம் தலைமையில் குழு
காஞ்சிபுரம்:
காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பதவியேற்றதன் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடஜனாதிபதி அப்துல் கலாம் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிருபர்களிடம் கூறுகையில்,
ஸ்ரீ ஜெயேந்திரர் பீடாதிபதியாக பதவியேற்ற பொன் விழா வரும் 2003ம் ண்டு மார்ச் 22ம் தேதி முதல் ஓராண்டு காலத்துக்கு நடக்கவுள்ளது.காஞ்சியில் இந்த விழாவை ஜனாதிபதி அப்துல் கலாம் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த ஓராண்டு கொண்டாட்டங்களுக்கு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு ஜனாதிபதி கலாமே தலைவராக இருப்பார்.இக் குழுவில் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், தேவே கெளடா, மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிஉள்ளிட்டவர்கள் இடம் பெறுவர்.
இந்த பொன் விழாவையொட்டி காஞ்சிபுரம் சர்வதீர்த்தக் குளக் கரையில் உள்ள 15 சிவன் கோவில்களும் புதுப்பிக்கப்படும். மேலும் நாடுமுழுவதும் 50 முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
இந்த 50வது ஆண்டு கொண்டாட்டத்துக்காக மும்பையில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவை முன்னிட்டு கண்காட்சியும் நடத்தப்படும். ஜெயேந்திரர் தங்கள் பகுதிக்கு வந்தபோது எடுத்த புகைப்படங்களை மக்கள் அனுப்பிவைக்கலாம். அவை கண்காட்சியில் வைக்கப்படும். அனுப்ப வேண்டிய முகவரி ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள் பீடாரோஹண சொர்ண ஜெயந்தி மகோத்சவ அறக்கட்டளை, எண்-1, 4, கைலாஸ் பவன், பிளான் எண் 258, சியான் சாலை,சியான் மேற்கு, மும்பை-400022.
இந்த நிகழ்ச்சியையொட்டி ஜெயேந்திரரின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனம் தயாரிக்க உள்ளதுஎன்றார்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications